’இங்க நான் தான் கிங்’: ஜெயிலர் படத்தின் இரண்டாம் ப்ரோமோ வெளியானது!

Published On:

| By Jegadeesh

Inga Nan Than King

ஜெயிலர் படத்திலிருந்து ‘‘Hukum’ என்ற பாடலின் இரண்டாவது சிங்கிள் ப்ரோமோ இன்று(ஜூலை 15) வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஜெயிலர்’. இந்தப்படத்தில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதனிடையே, கடந்த ஜூலை 6 ஆம் தேதி இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான ’காவாலா ’பாடல் வெளியானது.
இதில் நடிகை தமன்னா நடனம் ஆடியிருப்பார்.

ADVERTISEMENT

இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த பாடல் நடிகை சிம்ரன் , சமந்தா, நயன்தாரா, கத்ரினா கைஃப், மாளவிகா மோகனன், கியாரா அத்வானி, ஹன்சிகா மோத்வானி உள்ளிட்டோர் நடனமாடும் வகையில் சித்தரிக்கப்பட்டு ஆர்டிஃபிஷியல் இன்டலிஜன்ஸ் (Artificial intelligence) தொழில்நுட்பத்திலும் வெளியானது.

இந்நிலையில், ’ஜெயிலர்’ படத்திலிருந்து ‘Hukum’ என்ற பாடலின் புரோமோ இன்று (ஜூலை 15) வெளியாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT

அதில் நடிகர் ரஜினிகாந்த், ”இங்க நான் தான் கிங், நான் வச்சது தான் ரூல்ஸ். ரூல்ஸை அப்பப்ப மாத்திட்டே இருப்பேன். அத கப்சிப்னு கேட்டு பாலோ பண்ணனும்.

அத மீறி எதாவது அடாவடித் தனம் பண்ணனும்னு நினச்ச உன்ன கண்டந்துண்டமா வெட்டி கலச்சுபோட்டுருவேன். ‘Hukum’  டைகர் ஹா ‘Hukum’ ” என்று பேசுவது போன்ற டயலாக் இடம்பெற்றுள்ளது. இது தற்போது இந்த பாடலுக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் : வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீரர்கள்!

“விஜய் மட்டுமல்ல அனைவரும் அரசியலுக்கு வரலாம்” – சரத்குமார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share