ADVERTISEMENT

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: மொலுக்கா கடலில் சீறிய அலைகளும்… தப்பிய உயிர்களின் கதைகளும்

Published On:

| By Santhosh Raj Saravanan

indonesia earthquake molucca sea 7.4 magnitude

இயற்கை எப்போது கோபம் காட்டும் என்று யாராலும் கணிக்க முடியாது. இன்று அதிகாலை இந்தோனேசியாவில் நடந்தது அதற்கே ஒரு reminder. அமைதியாக தூங்கிக்கொண்டிருந்த மக்கள்… சில நொடிகளில் அச்சத்தோட தெருவில் ஓட வேண்டிய நிலை.

ரிக்டர் அளவில் 7.4 — இந்த ஒரு எண்ணே அந்த அதிர்வின் தீவிரத்தை சொல்லிடும்.

ADVERTISEMENT

அதிகாலையில் நடந்த அதிர்ச்சி — தூக்கத்திலிருந்து நேரடி பயம்

வியாழக்கிழமை காலை சுமார் 6:48 மணிக்கு, Molucca Sea பகுதியில் நிலம் திடீரென குலுங்க ஆரம்பிச்சது. சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம், Ternate அருகே அதிகமாக உணரப்பட்டது.

சில நொடிகள் தான் நீடிச்சாலும்… அந்த சில நொடிகள் பலருக்கு “என்ன நடக்குது?”ன்னு புரியாம போன நேரம்.

ADVERTISEMENT

எதையும் யோசிக்கல… ஓடினோம்” — மக்கள் சொல்ற அனுபவம்

நிலம் குலுங்க ஆரம்பிச்சதும், பலர் literally panic modeல அங்கும் இங்கு சிதறி ஓடினர். Bitung பகுதியில் இருந்த ஒருவர் இதை குறித்து பேசுகையில்  “வீடு குலுங்க ஆரம்பிச்சதும், குழந்தைகளைத் தூக்கிக்கிட்டு வெளியே ஓடினோம்… எதுவும் எடுத்துக்கொள்ளல.”, என்று கூறினார்.

சுனாமி எச்சரிக்கை… சில மணி நேர பதட்டம்

நிலநடுக்கத்துக்கு பிறகு உடனே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடல் நீர் மட்டம் உயர வாய்ப்பு இருந்ததால், கடலோர பகுதிகளில் tension peak-க்கு சென்றது.

ADVERTISEMENT

சுமார் 75 சென்டிமீட்டர் உயரம் வரை அலைகள் பதிவாகினாலும், பெரிய சேதம் ஏதும் ஏற்படாமல், சில மணி நேரங்களில் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. ஆனால், அதுவரைக்கும் ஒவ்வொரு நிமிஷமும் ஒரு uncertainty மக்களை நிலை குலைந்தனர்.

ஒரு உயிர் இழப்பு… இன்னும் பலர் காயம்

இந்த அதிர்வின் தாக்கத்தினால் Manado நகரத்தில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 70 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Ternate, Bitung பகுதிகளில் வீடுகளில் விரிசல்கள் மற்றும் தேவாலயங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. மீட்புப் படையினர் இன்னும் damage assessment செய்து கொண்டிருக்கிறார்கள்.

2004 நினைவு… இன்னும் மனதில் அழியாத பயம்

இந்தோனேசியா என்றாலே நம்மில் பலருக்கு 2004 Indian Ocean Tsunami தான் நினைவுக்கு வரும். மீண்டும் அதுபோல ஏதாவது நடக்குமோ என்று அச்சம் நம் அனைவருக்குமே  இருக்கதான் செய்கிறது.

இந்த நாடு Pacific “Ring of Fire”ல இருக்குறதால, earthquakes frequentஆ இருக்கும். ஆனாலும் ஒவ்வொரு முறையும் அந்த பயம் புதியதாகவே தோன்றுகிறது.

அடுத்த சில நாட்கள் — விழிப்புணர்வு அவசியம்

Experts சொல்வதன்படி aftershocks வர வாய்ப்பு இருக்கு அதனால் மக்கள் alertஆக இருக்க வேண்டியது அவசியமாகிறது. அரசு மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது.  இந்த நேரத்தில் அண்டை நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் உதவிக்கு தயாராகி வருகிறார்கள்.

ஒரு நிமிடம்… வாழ்க்கையை மாற்றிடும்

நிலநடுக்கம் ஒரு விஷயம் நமக்கு மீண்டும் நினைவூட்டுது — நாம எவ்வளவு திட்டமிட்டு வாழ்ந்தாலும், இயற்கை ஒரே நிமிஷத்தில் அதை மாற்றிடும். அந்த ஒரு நொடியில்:
பணம், பொருள், plans — எதுவும் முக்கியமில்லை. உயிர் தான் முக்கியம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share