பங்கு சந்தையில் வெளியேறும் முதலீட்டாளர்கள்… வீழ்ந்த இந்திய ரூபாய்!

Published On:

| By Minnambalam Desk

indian rupee goes down after share market fall

இன்று புதன்கிழமை காலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசா குறைந்து 85.67 ரூபாய் ஆக உள்ளது. indian rupee goes down after share market fall

நேற்று (செவ்வாய்) ரூபாய் மதிப்பு 16 பைசா குறைந்தது. வர்த்தக முடிவில், ஒரு டாலருக்கு ரூபாய் 85.58 ஆக இருந்தது.

இன்று இந்திய ரூபாய் மதிப்பு 85.65 என்ற அளவில் தொடங்கி, பின்னர் 85.67 ஆக விழுந்தது. அதாவது, நேற்றைக் காட்டிலும் ரூபாய் மதிப்பு 9 பைசா குறைந்துவிட்டது.

இதற்கான காரணம், அமெரிக்காவில் வட்டிவிகிதம் உயரும் என்ற எதிர்பார்ப்பு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நேற்று இந்திய பங்கு சந்தையிலிருந்து 10,016 கோடி ரூபாயை வெளியேற்றி உள்ளனர்.

இதனால் பங்குசந்தை நிலைமை பாதிக்கப்பட்டு, ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக வீழ்ச்சி அடைந்துள்ளது.

அந்நிய செலாவணி நிபுணர்கள் சொல்வதாவது, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் இந்திய ரூபாய் மீது கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

இதனால் டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு மேலும் குறைவடைய வாய்ப்பு உள்ளது.

உலக அளவில் தற்போது நிலவும் அரசியல் பதட்டம் காரணமாக, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அவசர கையிருப்பு தேக்க வசதிக்காக (strategic reserves) கச்சா எண்ணெய் வாங்க ஆரம்பித்துள்ளார்கள்.

இதனால் அதிக அளவிற்கு டாலர்களை பயன்படுத்தி கச்சா எண்ணெய் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ரூபாய் மீது அழுத்தம் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share