சர்வதேச மகளிர் தினமான கடந்த மார்ச் 8ஆம் தேதி தனது சிம்பொனியை லண்டனில் அரங்கேற்றம் செய்து இசையில் புதிய சகாப்தம் படைத்துள்ளார் இசைஞானி இளையராஜா. அவருக்கு உலகின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ilaiyaraaja felt emotion on his mother sacrifies
இந்த நிலையில் நியூஸ் 18 செய்தி தொலைக்காட்சி ஆசிரியர் கார்த்திகை செல்வனுடன் நடந்த உரையாடலில், தனது தாயார் சின்னத்தாய் குறித்தும், தனது வாழ்க்கையில் அவரின் ஈடு செய்ய முடியாத பங்களிப்பு பற்றியும் உருக்கமாக விவரித்துள்ளார் இளையராஜா.
அவர் கூறியதாவது, “நாங்கள் சென்னைக்கு போக வேண்டும் என்று சொல்லியதும் அம்மா வீட்டில் இருந்த ரேடியோக்களை விற்று 400 ரூபாய் கையில் கொடுத்தார்கள். கொடுத்துவிட்டு ’போதுமாப்பா’ என்று கேட்டார்கள். அதற்கு முன்பாக நாங்கள் அண்ணனுடன் கச்சேரி பண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் வருடத்தில் 300 நாட்களும் நிகழ்ச்சி இருக்கும். இதில் வரும் பணத்தை அண்ணன் தான் நிர்வகித்தார். அதிலிருந்து மாதாமாதம் அம்மாவுக்கு பணம் கொடுப்போம். அதற்குப் பிறகு ’எங்களுக்கும் தினமும் சம்பளம் மாதிரி கொடுத்து விடு’ என்று அண்ணனிடம் அம்மா சொல்லி இருந்தாங்க.

அதன் பின்னர் எங்களுக்கும் செலவுக்கு பணம் கிடைக்கும். அதனை நன்றாக செலவழித்து விட்டு மீதம் உள்ளதை அம்மாவிடம் சென்று கொடுப்போம். அப்படி பணப்புழக்கம் எங்களிடம் சாதாரணமாக இருந்தாலும் கூட இசையை முறையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு உறுத்தலாக இருந்தது. அப்போதுதான் அம்மாவிடம் சென்று சென்னைக்கு செல்ல வேண்டும் என்று கூறினோம்.
அம்மாவும் சென்னைக்கு வந்துட்டாங்க! ilaiyaraaja felt emotion on his mother sacrifies
இசையை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் சென்னைக்கு வந்தோம். இங்கு நாங்கள் கஷ்டப்படுவதை அறிந்து ஊரிலிருந்து கங்கை அமரன் வந்தார். அவர் எங்களுக்கு சமைக்க ஆரம்பித்தார். அது எங்களுக்கு ருசியாக இல்லை. அப்புறம் திடீர்னு பார்த்தா அம்மாவே வந்துட்டாங்க. ‘என்னம்மா வந்துட்டீங்க?’ ன்னு கேட்டோம். ‘பிள்ளைகளுக்கு நான் சமைச்சு போடணும்’ அப்படின்னு சொல்லிட்டாங்க.
அம்மா என்னுடைய உயர்வுகள் எல்லாவற்றையும் பார்த்துட்டாங்க. இவற்றை எங்க அப்பா முன்னாலே அம்மாவிடம் சொல்லிட்டாங்க. ‘நம்ம வீட்ல ராஜா தான் பெரியவனா வரப் போகிறான். எல்லா உயர்வுகளையும் நீ காண்பாய். நான் அப்போது இருக்க மாட்டேன்’ என்று அப்பா அன்றைக்கு சொல்லிவிட்டார்” என இளையராஜா பகிர்ந்துள்ளார்.