வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி ரஜினியின் ‘கூலி’ படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. rajinikanth coolie release date announce by lokesh
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் 171வது படமாக உருவாகி வந்த ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், நாகார்ஜுனா, செளபின் சாகீர், உபேந்திரா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
தற்போது படத்தின் டப்பிங், போஸ்ட் புரோடொக்சன் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும் ரிலீஸ் தேதி அறிவிக்காமல் இருந்து வந்ததால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருந்தனர்.
இந்த நிலையில், ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகும் என படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி வியாழக்கிழமை படம் ரிலீஸ் ஆக உள்ளது என்பதால், கூலி நிச்சயம் வசூல் சாதனை பட்டியலில் இடம்பெறும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து விரைவில் படத்தின் டீசர், டிரெய்லர் என படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வரும் என்பதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.