மும்பை அணியில் இருந்து ஜெய்ஸ்வால் விலகல்… காரணம் யார் தெரியுமா?

Published On:

| By christopher

rahane a reason behind jaiswal move mumbai to goa

மும்பை அணியில் இருந்து கோவா அணிக்கு ஜெய்ஸ்வால் மாறியதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. rahane a reason behind jaiswal move mumbai to goa

கடந்த ஜனவரியில் முடிந்த ஆஸ்திரேலியா அணி உடனான பார்டர் கவாஸ்கர் தொடரில் ஏற்பட்ட படுதோல்விக்கு பிறகு, ரஞ்சி டிராபி, சையத் முஷ்டாக் அலி டிராபி, துலிப் டிராபி உள்ளிட்ட உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாட வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டது.

ADVERTISEMENT

அதன்படி ரஞ்சித் தொடரில் மும்பை அணிக்காக விளையாடினார் இந்திய அணியின் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

கோவா அணிக்கு செல்ல ஒப்புதல்! rahane a reason behind jaiswal move mumbai to goa

இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளாக மும்பை அணிக்காக விளையாடி வந்த அவர், கோவை அணிக்கு செல்ல விருப்பம் தெரிவித்து கடந்த 1ஆம் தேதி கடிதம் அனுப்பினார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், ஜெய்ஸ்வாலின் முடிவை மும்பை கிரிக்கெட் சங்கமும் ஏற்றுக்கொண்டது.

ADVERTISEMENT

இதனையடுத்து 23 வயதான ஜெய்ஸ்வால், 2025-26 சீசனில் இருந்து கோவா அணியின் கேப்டனாக ரஞ்சித் தொடரை சந்திக்க உள்ளார்.

கடினமான முடிவு! rahane a reason behind jaiswal move mumbai to goa

இதுதொடர்பாக ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இது எனக்கு மிகவும் கடினமான முடிவு. நான் இன்று என்னவாக இருக்கிறேனோ அதற்கு மும்பை கிரிக்கெட் சங்கம் தான் காரணம். இந்த நகரம் என்னை ஒரு வீரராக மாற்றியுள்ளது, என் வாழ்நாள் முழுவதும், நான் MCA-க்கு கடன்பட்டிருப்பேன்,” என்று ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும் அவர், “கோவா எனக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்கியுள்ளது, அது எனக்கு கேப்டன் பொறுப்பை வழங்கியுள்ளது. இந்தியாவுக்காக சிறப்பாகச் செயல்படுவதே எனது முதல் இலக்காக இருக்கும். நான் தேசியப் பணியில் இல்லாத போதெல்லாம், கோவாவுக்காக விளையாடுவேன். சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன்” எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஜெய்ஸ்வால் வெளியேறியதற்கான காரணங்கள் குறித்து இந்தியா டுடே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

கேப்டனுடன் மோதல்!

அதில், கடந்த சில ஆண்டுகளாக மும்பை அணியின் கேப்டனான அஜிங்க்யா ரஹானேவுக்கும், ஜெய்ஸ்வாலுக்கும் இடையேயான போக்கில் மோதல் நிலவுகிறது.

கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த துலிப் டிராபி தொடரில் தென் மண்டல அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்தார். அந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 323 பந்துகளில் 30 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 265 ரன்கள் குவித்தார்.

எனினும் அப்போட்டியில் தென் மண்டல வீரர் ரவி தேஜாவை அதிகமாக ஸ்லெட்ஜிங் செய்ததற்காக மேற்கு மண்டல கேப்டன் ரஹானேவால் வெளியேற்றப்பட்டார். அதுமுதல் இருவருக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஜனவரியில் நடந்த ரஞ்சித் தொடரில் ஜம்முக்காஷ்மீருக்கு எதிரான முக்கியமான போட்டியில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 30 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதனையடுத்து மும்பை பயிற்சியாளர் ஓம்கார் சால்வி மற்றும் ரஹானே இருவரும், ஜெய்ஸ்வாலின் அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் ஷாட் தேர்வு குறித்து கேள்வி எழுப்பியதாகத் தெரிகிறது. இதில் மன உளைச்சலுக்கு உள்ளான ஜெய்ஸ்வால், ரஹானேவின் கிட்பேக்கை எட்டி உதைத்ததும் தெரியவந்தது.

இவ்வாறு தொடர்ந்து மும்பை அணி கேப்டன் மற்றும் நிர்வாகத்தின் மீதான அதிருப்தி காரணமாக ஜெய்ஸ்வால் கோவாவுக்குச் செல்ல முடிவு செய்திருக்கலாம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share