Video : வீர தீரன் சூரன் 2 வெற்றி… உணர்ச்சிவசப்பட்டு விக்ரம் சொன்ன செய்தி!

Published On:

| By christopher

vikram thanked for veera dheera sooran victory

வீர தீர சூரன் 2 வெற்றியடைந்துள்ள நிலையில் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து இன்று (ஏப்ரல் 4) வீடியோ வெளியிட்டுள்ளார் விக்ரம். vikram thanked for veera dheera sooran victory

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் 27ஆம் தேதி வெளியான திரைப்படம் ’வீர தீர சூரன் பார்ட் 2′.

ADVERTISEMENT

விறுவிறுப்பான திரைக்கதையுடன், விக்ரமுடன் எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் என பலரின் அசத்தலான நடிப்பும் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு பெரும் வரவேற்பை பெற்று தந்தன. இந்த நிலையில் கடந்த 8 நாட்களில், 52 கோடி வசூலைக் குவித்துள்ளதாக அறிவித்தது வீர தீர சூரன் 2 படக்குழு.

படத்தின் வெற்றியை அடுத்து கடந்த ஒருவாரமாக மதுரை, திருச்சி, சேலம், கரூர் என பல்வேறு மாவட்டங்களில் வீர தீர சூரன் 2 வெளியான திரையரங்களுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்து வந்தார் விக்ரம்.

ADVERTISEMENT

இந்த நிலையில் பல தடைகளுக்கு மத்தியில் அனைத்தையும் கடந்து வெளியான படத்திற்கு பெரும் ஆதரவு அளித்துள்ள ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் விக்ரம்.

அதில், “ஒரே ஒரு வாழ்க்கை, அதுல வரலாறா வாழ்ந்துட்டு போகனும்னு ஒருத்தன் ஈசியா சொல்லிட்டு போயிட்டான், ஆனா இந்த வாழ்க்கை இருக்கே… ஏதாவது ஒரு பிரச்சனை நம்மை தூக்கி அடிக்குது.

ADVERTISEMENT

உதாரணத்திற்கு வீர தீர சூரன் 2. படம் ரிலீஸுக்கு முன்னால் பார்த்த நண்பர்கள், இது இந்த வருடத்தின் மிகப்பெரிய படமாக இருக்குமென பாரட்டினார்கள்.

ஆனால் ரிலீஸ் நாளான்று எதிர்பாராமல் ஏற்பட்ட தடங்கல்களால், படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. ஒரு படம் முதல் ஷோ வரவில்லை என்றாலே அந்தப்படம் ஓடாது என்பார்கள். வீர தீர சூரன் மாலைக்காட்சி தான் வந்தது. ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் தந்த வரவேற்பு மறக்கமுடியாதது.

குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் ஒவ்வொரு விசயத்தையும், குறிப்பிட்டு பாராட்டிக் கொண்டாடினார்கள். படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றியுள்ளார்கள். படம் சேர வேண்டிய இடத்தை சேர்ந்துவிட்டது.

எனது ரசிகர்களுக்கு ஒரு மாஸானா, கிளாஸான, உண்மைக்கு நெருக்கமான ஒரு படைப்பை தர வேண்டுமென நீண்டநாட்களாக ஆசைப்பட்டேன். இயக்குநர் அருண்குமார் மூலம் அது நடந்தது.

என் ரசிகர்களுக்கு நன்றியைத் தவிர வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை. என் மீதான உங்கள் அன்புக்கு நன்றி. உங்களுக்காக தொடர்ந்து நல்ல படங்கள் தருவேன். அனைவருக்கும் நன்றி” என விக்ரம் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share