கடைசி நேரத்தில் திலக் வர்மாவின் எதிர்பாரா முடிவால் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது மும்பை அணி. mi lost to lsg by 20 runs.. hardik fifer goes vein
தனது சொந்த மைதானமான ஏகானாவில் மும்பை இந்தியன்ஸ் அணியை இன்று (ஏப்ரல் 4) இரவு எதிர்கொண்டது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.
டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ அணிக்கு தொடக்க வீரர்களான ஷான் மார்ஷ் (60) மற்றும் ஏய்டன் மார்க்ரம் (53) சிறப்பான தொடக்கம் தந்தனர்.
அதன்பின்னர் களமிறங்கிய ஆரஞ்ச் கேப் ஹோல்டர் பூரன் 12 ரன்னில் ஆட்டமிழக்க, ரிஷப் பண்ட் வழக்கம்போல 2 ரன்னில் ஏமாற்றமளித்தார். அடுத்து களம் கண்ட ஆயூஷ் பதோனி (30) மற்றும் டேவிட் மில்லர்(27) பொறுப்புடன் விளையாடினர்.
அதன்பின்னர் வந்த வீரர்கள் வந்தவேகத்தில் வெளியேற லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது. மும்பை அணி தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். mi lost to lsg by 20 runs.. hardik fifer goes vein

தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த மும்பை அணியின் தொடக்க வீரர்கள் வில் ஜாக்ஸ் (5) மற்றும் ரிக்கிள்டன் (10) அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
எனினும் அதன்பின்னர் வந்த நமன் தீர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினர்.
இந்த ஜோடி 69 ரன்கள் குவித்த நிலையில் அரைசதத்தை நெருங்கிய நமன் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடி வந்த சூர்ய குமாரும் 67 ரன்களில் ஆவேஷ் குமாரின் பந்துவீச்சில் வெளியேறினார்.
அதன்பிற்கு திலக் வர்மா – கேப்டன் ஹர்திக் பாண்டியா ஜோடி பொறுப்புடன் விளையாடி வந்தனர். ஆனால் 7 பந்துகளில் 24 ரன்கள் அடிக்க வேண்டிய முக்கியமான கட்டத்தில், யாருமே எதிர்பாராத விதமாக திலக் வர்மா ரிட்டயர்ட் அவுட் ஆனார். சாண்டனர் உள்ளே வந்தார்.
கடைசி ஒரு ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா முதல் பந்தை மட்டுமே சிக்சருக்கு தட்டிய நிலையில், அடுத்த ஐந்து பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது மும்பை அணி.
இதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற லக்னோ அணி, தொடரில் 2வது வெற்றியை பதிவு செய்தது. mi lost to lsg by 20 runs.. hardik fifer goes vein