ஐஐடி காரக்பூரின் புதிய ஆன்லைன் முயற்சி
இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமான ஐஐடி (IIT) காரக்பூர், தொழில்நுட்ப துறையில் திறன் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு 4 புதிய ஆன்லைன் எக்ஸிக்யூட்டிவ் கோர்ஸ்களை (Online executive Courses) அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பாடங்கள் குறிப்பாக வேலை செய்து வரும் நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப துறையில் முன்னேற விரும்புவோருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த பாடங்கள் அறிமுகம்?
இந்த புதிய திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட முக்கிய பாடங்கள் செயற்கை நுண்ணறிவு (AI), மெஷின் லெர்னிங், டேட்டா சார்ந்த தொழில்நுட்பங்கள். டெக் லீடர்ஷிப் மற்றும் மேலாண்மை, போன்ற எதிர்காலத் திறன்களை மையமாகக் கொண்டவை.
இந்த பாடங்கள் தொழில்துறையில் தேவைப்படும் திறன்களை நேரடியாக கற்றுத்தரக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆன்லைன் கோர்ஸ்களின் முக்கிய அம்சங்கள் முழுக்க ஆன்லைன் முறையில் கற்றல், ஐஐடி பேராசிரியர்கள் நேரடியாக கற்பித்தல், தொழில்துறை பயன்பாட்டை மையமாகக் கொண்ட பாடத்திட்டம் என்பனவாகும்.
சில பாடங்கள் 8 மாத கால அளவுடன், செய்முறை கற்றல் மற்றும் திட்ட அடிப்படையிலான பயிற்சியையும் உள்ளடக்கியதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பாடங்கள் குறிப்பாக இன்ஜினியரிங் மற்றும் சயின்ஸ் பட்டதாரிகள், தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிபவர்கள், மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப தலைமைத் திறன் மேம்படுத்த விரும்புவோர் போன்றவர்களுக்கு உகந்ததாக இருக்கும்.
மேலும், தொழில்நுட்ப பின்னணி இல்லாதவர்களுக்கும் சில பாடங்கள் திறந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏன் இந்த கோர்ஸ்கள் முக்கியம்?
தற்போது ஏஐ மற்றும் மெஷின் லெர்னிங் திறன்களுக்கு உலகளவில் அதிக தேவை, நிறுவனங்களில் டிஜிட்டல் மாற்றம் வேகமாக நடைபெற்று வருகிறது.
எனவே, இந்த வகை குறுகிய கால எக்ஸிக்யூட்டிவ் கோர்ஸ்கள் தொழில்முன்னேற்றத்திற்கு முக்கியமாக கருதப்படுகின்றன.
தொழில் முன்னேற்றத்திற்கு உதவும் அம்சங்கள்
இந்த பாடங்களை முடித்தவர்களுக்கு ஏஐ இன்ஜினியர், டேட்டா சயின்டிஸ்ட், டெக் லீடர், புரொடக்ட் மேனேஜர் போன்ற உயர்நிலை பணிகளில் வாய்ப்பு கிடைக்கும் என கல்வி வட்டாரங்கள் கூறுகின்றன.
ஐஐடி காரக்பூர் (IIT Kharagpur) அறிமுகப்படுத்தியுள்ள இந்த 4 ஆன்லைன் எக்ஸிக்யூட்டிவ் கோர்ஸ்கள், எதிர்கால தொழில்நுட்ப திறன்களை கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு முக்கிய வாய்ப்பாகும். குறிப்பாக ஏஐ மற்றும் மெஷின் லெர்னிங் துறையில் முன்னேற விரும்புவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
