அடிவாங்கிய ஏர்டெல் நிறுவனம்: உச்சம் கண்ட ஐசிஐசிஐ வங்கி மூலதனம்!

Published On:

| By Santhosh Raj Saravanan

ICICI Bank market cap increased by 29589 crore rupees

கடந்த வாரம் சென்செக்ஸ் (Sensex) குறியீட்டில் உள்ள முதல் 10 நிறுவனங்களில் ஆறு நிறுவனங்களின் சந்தை மூலதனம் (market cap) மொத்தம் ரூ.88,678.10 கோடி அதிகரித்தது. மொஹரம் பண்டிகை காரணமாக கடந்த வாரம் பங்குச் சந்தைகள் மூடப்பட்டிருந்ததால், நான்கு நாட்கள் மட்டுமே வர்த்தகம் நடைபெற்றது. இக்காலகட்டத்தில், பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 297.57 புள்ளிகள் அல்லது 0.38 சதவீதம் உயர்வுடனும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 50 (Nifty 50) குறியீடு 42.90 புள்ளிகள் அல்லது 0.17 சதவீதம் உயர்வுடனும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

மூலதனம் அதிகரித்த நிறுவனங்கள்

கடந்த வாரம் ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries), எச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank), ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), பஜாஜ் ஃபைனான்ஸ் (Bajaj Finance) மற்றும் லார்சன் & டூப்ரோ (L&T) ஆகியவற்றின் சந்தை மூலதனம் அதிகரித்தது. அதே வேளையில், பார்தி ஏர்டெல் (Bharti Airtel), டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (LIC) மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் (Hindustan Unilever) ஆகியவற்றின் சந்தை மூலதனம் சரிவைக் கண்டது.

ADVERTISEMENT
ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனம்

இக்காலகட்டத்தில் ஐசிஐசிஐ வங்கி அதிகபட்ச வளர்ச்சியைப் பதிவு செய்தது. ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனம் ரூ.29,588.75 கோடி அதிகரித்து ரூ.9,95,610.74 கோடியாக உயர்ந்தது. எச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மதிப்பு ரூ.24,718.30 கோடி அதிகரித்து ரூ.12,25,981.44 கோடியாகவும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு ரூ.12,043.96 கோடி அதிகரித்து ரூ.17,83,926.92 கோடியாகவும், பஜாஜ் ஃபைனான்ஸின் மதிப்பு ரூ.11,580.28 கோடி அதிகரித்து ரூ.6,10,081.53 கோடியாகவும் உயர்ந்தன.

பார்தி ஏர்டெல் கடும் சரிவு

எஸ்பிஐ-யின் சந்தை மூலதனம் ரூ.9,322.93 கோடி அதிகரித்து ரூ.9,64,738 கோடியாகவும், லார்சன் & டூப்ரோவின் சந்தை மூலதனம் ரூ.1,423.88 கோடி அதிகரித்து ரூ.5,80,550.83 கோடியாகவும் உயர்ந்தன. பார்தி ஏர்டெல்லின் சந்தை மூலதனம் ரூ.35,615.21 கோடி சரிந்தது. இதற்கிடையில், கடந்த வாரம் பார்தி ஏர்டெல்லின் சந்தை மதிப்பு ரூ.35,615.21 கோடி குறைந்து ரூ.11,27,348.09 கோடியாக சரிந்தது. எல்ஐசி-யின் (LIC) சந்தை மதிப்பும் ரூ.21,188.74 கோடி குறைந்து ரூ.5,35,537.56 கோடியாகக் குறைந்தது. டிசிஎஸ் (TCS) நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.11,143.71 கோடி குறைந்து ரூ.7,58,206.42 கோடியாகவும், ஹிந்துஸ்தான் யூனிலீவரின் சந்தை மதிப்பு ரூ.5,321.83 கோடி குறைந்து ரூ.5,10,624.92 கோடியாகவும் சரிந்தன.

ADVERTISEMENT
Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share