சுவையான சோயா பிரியாணி : ஹோட்டல் ஸ்டைல்  செய்வது எப்படி? ரெசிபி இதோ..!

Published On:

| By Santhosh Raj Saravanan

How to make hotel style soya biryani recipe Here

ஹோட்டல் ஸ்டைல் ஆம்பூர் சோயா பிரியாணி செய்வது எப்படி என்பது குறித்துப் பார்க்கலாம்

வார இறுதி நாட்களில் அசைவ பிரியாணி, புலாவ் போன்ற உணவுகளை சாப்பிட்டு நமக்கு பலருக்கு சலித்திருக்கும். புதிய சுவையுடன் ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கலாம். அப்படி ஒரு உணவுப் பொருளான சோயா பிரியாணியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.

ADVERTISEMENT

ஹோட்டல் ஸ்டைல் சோயா பிரியாணியை (soya biryani) சமைக்கத் தெரியாத ஆண்கள் கூட எளிதாக செய்துவிட முடியும். சிக்கன் பிரியாணிக்கு இணையான சுவையும் சோயா பிரியாணியிலும் இருக்கும்.  ஹோட்டல் ஸ்டைலில் சோயா பிரியாணி செய்வது எப்படி என்பது குறித்துப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் (Ingredients for Soya Biryani)
  • சீரக சம்பா அரிசி  – ஒரு கப்
  • சோயா துண்டுகள் –  ஒரு கப்
  • பெரிய வெங்காயம் – 2
  • தக்காளி – 1
  • மிளகாய், இஞ்சி, பூண்டு விழுதுகள்
  • புதினா, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
  • உப்பு – தேவையான அளவு
  • தண்ணீர் – 1.5 கப்
  • தயிர் – 3 தேக்கரண்டி
  • எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
  • எண்ணெய் – தேவையான அளவு
  • கிராம்பு – 2
  • இலவங்கப் பட்டை – 2
  • ஏலக்காய் – 2
பிரியாணி தயாரிப்பது எப்படி?

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து அதில் சோயா துண்டுகளைச் சேர்க்கவும். அது மென்மையாகி அளவில் பெரிதானதும் தனியாக எடுத்து வைத்துவிடவும்.  ஒரு குக்கரில் எண்ணெய் அல்லது நெய்யை இட்டு சூடாக்க வேண்டும். அதில் பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்க்க வேண்டும். உடனடியாக பூண்டு விழுது (Ginger garlic paste) சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பிறகு இஞ்சி விழுது,  காய்ந்த மிளகாய் விழுதை அடுத்தடுத்து சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.

ADVERTISEMENT

இதெல்லாம் முடித்த பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத் துண்டுகளை (Onion for Biryani) சேர்த்து, அவை பழுப்பு நிறமாகும் வரை வதக்குங்கள். பிறகு தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். இப்போது தண்ணீரில் ஊறவைத்த சோயா துண்டுகளைச் சேர்த்து, மசாலாப் பொருட்கள் அதன் மீது நன்றாக கலக்கும்படி கிண்ட வேண்டும்.

கடைசியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி (Mint, coriander benifits), உப்பு, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்க வேண்டும். பிறகு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இறுதியாக அரிசியைச் சேர்த்து கலக்கிவிட்டு குக்கரை மூடி, ஒரு விசில் வரும் வரை குறைந்த தீயில் சமைக்கவும். பிறகு சற்று நேரம் பொறுத்து மெதுவாக மூடியைத் திறக்கவும். இப்போது மிகவும் சுவையான ஆம்பூர் ஸ்டைல் ​​சோயா பிரியாணி தயார்

ADVERTISEMENT
Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share