நம்முடைய அழகை தனித்துக்காட்டி வசீகரிக்கச் செய்வது உதடுகள்தான். உங்கள் நிறத்துக்கேற்ற லிப்ஸ்டிக்கை எப்படி தேர்வு செய்வது?
உதடுகள் அதிக வறட்சியாக இருக்கிறது என்பவர்கள் ஃக்ரீம் போன்ற லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்யலாம்.
பளபளப்பான உதடுகள் வேண்டுமென விரும்புபவர்கள் ஃக்ளாஸி வகை லிப்ஸ்டிக்களை தேர்வு செய்யலாம். பளபளப்பான லிப்ஸ்டிக் வகைகளை விரும்பாதவர்கள் மேட் ஃபினிஷ் லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்யலாம்.
உதடுகள் சுருக்கங்களுடன் இருக்கிறது என்ன வகை லிப்ஸ்டிக் போட்டாலும் எடுப்பாக இல்லை என்று நினைப்பவர்கள் லிப் பிரைமரை அப்ளை செய்து அதன்பின் லிப் மேக்கப்பை தொடங்கலாம்.
டார்க், டஸ்கி ஸ்கின் டோன் உடையவர்கள் பிரவுன், கேரமல், ஓயின் நிறம், பர்கண்டி நிறம் போன்ற நிறங்களைத் தேர்வு செய்யலாம்.
வெளிர் நிறம் உடையவர்கள் லைட் பிங்க், பீச், நியூட் நிறங்கள், டஸ்டி சிகப்பு, கோரல் நிறங்களைத் தேர்வு செய்யலாம்.
மாநிறம் உடையவர்கள் ரோஸ், செர்ரி சிகப்பு போன்ற நிறங்களைத் தேர்வு செய்யலாம்.
மெல்லிய உதடுகள் கொண்டவர்கள் அடர் நிற லிப்ஸ்டிகளை தேர்வு செய்வதை தவிர்த்து க்ரீம் அல்லது க்ளாஸி லிப்ஸ்டிகளை தேர்வு செய்யலாம்.
பெரிய உதடுகள் உடையவர்கள் லிப்ஸ்டிக் ஷேட் பயன்படுத்துவதைத் தவிர்த்து மைல்டு நிற லிப்ஸ்டிக்களை பயன்படுத்துவது நல்லது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இதுக்கு பேரு தான் மய்யம்: அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை இல்லாமல் சந்தோஷ் நடத்திய முக்கிய கூட்டம்… அதிரடி முடிவு!