இதுக்கு பேரு தான் மய்யம்: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

தலைய வலிக்குதே டீ குடிக்க போகலாமா? வேண்டாமா? அப்படின்னு சாயங்காலம் ஆபிஸ்ல உட்கார்ந்து ரொம்ப தீவிரமா யோசிச்சிட்டு இருந்தேன்.

அப்போ ஊர்ல இருந்து கால் பண்ண நம்ம பக்கத்து வீட்டு அண்ணன், ”ஒரே கொழப்பமா இருக்கு தம்பின்னு” ஆதங்கப்பட்டாரு, நான் உடனே பதறிப்போய் ”என்னன்னே எதுவும் பிரச்சினையான்னு?” கேட்டேன்.

அதுக்கு அவரு,”வர்ற 2026 தேர்தல்ல எந்த தளபதிக்கு ஓட்டு போடுறதுன்னே தெரியலன்னு” ரொம்ப வெசனப்பட்டு  சொன்னாரு. நான் பதிலுக்கு, ”இதுக்கு பேரு தான் அண்ணே மய்யம்ன்னு” சொல்லிட்டு போனை வச்சிட்டேன்.

இப்போ கண்டிப்பா அண்ணாச்சி கடைக்கு போய் தான் ஆகணும் போல… நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

Manjari

“இதுவரை எந்த கட்சியும் தயாரிக்காத அளவுக்கு சிறப்பான தேர்தல் அறிக்கையை தயாரிக்க உள்ளோம்” – நத்தம் விஸ்வநாதன் #

என்ன டபுள் லேமினேஷன் போட்டு இருக்குமா..

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

பாஜக இல்லாத மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் ~ ஜெயக்குமார்

# சார் கூட்டணிக்கு வர்றீங்களா..?

யோவ் இது திமுக ஆபிஸ் போன் நம்பர்யா..

சாரி சார் சாரி சார்

கடைநிலை ஊழியன்

பொறுமையா இரு.. உனக்கும் ஒரு காலம் வரும் னு சொல்லுவாங்க.. நம்பாத..

நீ உழைச்சா மட்டும் தான் வரும்..

Rafic

விஜய் கட்சி ஆரம்பிச்சிட்டாரு இனி திமுக,அதிமுக ஓட்டை பிரிச்சுருவாரு நமக்கு லாபம்தான் பங்கு

அப்போ நம்ம ஓட்டு பிரியாதா ??

நமக்கு ஓட்டு இருந்தால்தானே பிரியிறதுக்கு..

mohanram.ko

வீட்டுக்கு தேவையான அரிசி, பருப்பு, மளிகை பொருட்களையும் வாங்கி வச்சிட்டு, தினமும் கடையில் இட்லி மாவு வாங்கிட்டு போறீங்களே…. யார்றா நீங்கெல்லாம்?

Villanism

“இதுவரை எந்த கட்சியும் தயாரிக்காத அளவுக்கு சிறப்பான தேர்தல் அறிக்கையை தயாரிக்க உள்ளோம்”

-நத்தம் விஸ்வநாதன், அதிமுக துணை பொதுச்செயலாளர்

# நம்ம கட்சி மாநாட்டுல மதிய சாப்பாட்டுக்கு புளிசோறு கூட உருப்படியா தயாரிக்க தெரியாத நமக்கு இந்த வீர வசனம் எல்லாம் அவசியமா கோபி..?

 

தர்மஅடி தர்மலிங்கம்

புதியதாக யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்களை மனதார பாஜக வரவேற்கும் – அண்ணாமலை!

எப்படியும் அவங்களுக்கு போட்டி நோட்டா தான அந்த தைரியத்துல சொல்றாரு போல..?!

படிக்காதவன்

கடன் குடுத்தவன் மாசம் பிறந்து நாளு நாள் ஆகிடுச்சுனு ஞாபகப்படுத்துறான்
என்ன மனுஷன்யா…

-லாக் ஆஃப் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விமர்சனம்: வடக்குபட்டி ராமசாமி

Video: பறந்து வந்த மாலை… அடுத்து தளபதி செஞ்சது தான் ஹைலைட்!

+1
0
+1
4
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *