Video: பறந்து வந்த மாலை… அடுத்து தளபதி செஞ்சது தான் ஹைலைட்!

சினிமா

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘GOAT’ படத்தின் ஷூட்டிங் இன்று(பிப்ரவரி 4) பாண்டிச்சேரியில் நடைபெற்றது. இதில் விஜய் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

விஜய் ஷூட்டிங்கில் பங்கேற்பது தெரிந்தவுடன் ரசிகர்கள் அவரைக்காண குவிந்து விட்டனர். இதனால் அந்த இடமே ரசிகர்களால் நிரம்பி வழிந்தது.

கிளீன் ஷேவ் லுக்கில் படப்பிடிப்பு வாகனத்தின் மீது ஏறி நின்று விஜய் ரசிகர்களை சந்தித்தார். அப்போது கூட்டத்தில் இருந்து ரசிகர்கள் அவரை நோக்கி மாலைகளை வீசினர்.

இது அவரின் காலடியில் வந்து விழுந்தது. இதைப்பார்த்த விஜய் சிறிதும் தாமதிக்காமல் அதை எடுத்து தன்னுடைய கழுத்தில் போட்டு கொண்டு, ரசிகர்களை நோக்கி கும்பிட்டார்.

பின்னர் அந்த மாலையில் உள்ள பூக்களை எடுத்து ரசிகர்கள் மீது தூவினார். இதைப்பார்த்த ரசிகர்கள் கரவொலி எழுப்பியும், ”தலைவா” என்று கத்தியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தமிழக வெற்றி கழகம் கட்சியை தொடங்கிய பின்னர், விஜய் ரசிகர்களை சந்தித்த முதல் நிகழ்வாக இந்த பாண்டிச்சேரி விசிட் அவருக்கு அமைந்துள்ளது.

இதையடுத்து சமூக வலைதளங்களில் விஜய் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.

இதனால் #TNWelcomesTVKVijay, #TamizhagaVetriKazhagam, #தமிழகவெற்றிகழகம், #ThalaivarVijay ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்தியளவில் தற்போது ட்ரெண்டாகி வருகின்றன.

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உதயசூரியனில் நிற்கமாட்டோம்… திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கும் விசிக, மதிமுக: பின்னணி இதுதான்!

லவ்வர் படத்தில் இத்தனை ஆபாச வார்த்தைகளா?

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *