தமிழகத்தின் பணக்கார வேட்பாளர்.. லாட்டரி மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் சொத்து விபரம் இதோ!

Published On:

| By Pandeeswari Gurusamy

leema rose

திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் லாட்டரி மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் போட்டியிடுக்கிறார். அவர் நேற்று லால்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் ஸ்ரீதரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் இந்நிலையில் சொத்து மதிப்பு குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளது

தேர்தல் பிரமாண பத்திரத்தில் லீமாரோஸ் கடந்த நிதியாண்டில் தான் ரூ. 9. 82 கோடி வருமானம் ஈட்டியதாகவும் தனது கணவர் மார்ட்டின் ரூ.11.39 கோடி வருமானம் ஈட்டியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் ரூ.5 லட்சம் ரொக்கமான கையிருப்பு இருப்பதாகவும், தனது கணவர் மார்ட்டினிடம் ரூ.56 லட்சம் ரொக்க கையிருப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

தனக்கு ரூ.139.62 கோடி அசையும் சொத்துக்களும் ரூ.909. 94 கோடி அசையா சொத்துக்களும் உள்ளது என தெரிவித்துள்ளார். தனது கணவரும் தொழிலதிபருமான மார்ட்டினுக்கு ரூ. 3,262 கோடி அசையும் சொத்துக்களும், ரூ.887.36 கோடி அசையா சொத்துக்களும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்

இந்த தம்பதியின் மகன் ஜோஸ் டைசன் மாட்டினிடம் 225.56 கோடி அசையும் சொத்துக்களும் ரூபாய் 439.2 ஒரு கோடி அசையா சொத்துக்களும் உள்ளது என தெரிவித்துள்ளார்

ADVERTISEMENT

அந்த வகையில் தனது குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.5,863 கோடி என தனது வேட்பு மனுவுடன் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.

மேலும் தன்னிடம் 19,233 கிராம் தங்கம்,1,31,813 கிராம் வெள்ளி தங்கம்,1217 காரட் வைரம், 32 கிராம் பிளாட்டினம் இருப்பதாக லீமாரோஸ் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும் கணவர் மாட்டினிடம் 281 கிராம் தங்கம், மற்றும் 20,974 கிராம் வெள்ளியும் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் மகனிடம் 326 கிராம் தங்கம் 60,380 கிராம் வெள்ளி உள்ளிட்ட நகைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதே சமயம் அவர் மீது நான்கு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share