ஐடி சேவை துறையில் புதிய வாய்ப்பு
சென்னையில் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான எச்சிஎல் டெக் (HCL Tech), ஃபிரெஷர்களுக்கான வாக்-இன் (Walk-in) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நேர்முகத் தேர்வு இன்று ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த ஆட்சேர்ப்பு, ஐடி (IT) மற்றும் பிபிஓ துறைகளில் தனது தொழில்வாழ்க்கையை தொடங்க விரும்பும் பட்டதாரிகளுக்கு முக்கிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
எந்த பணிகளுக்கு ஆட்சேர்ப்பு?
ப்ராசஸ் அசோசியேட் மற்றும் டிரைவர் (சில குறிப்பிட்ட ஆதரவு பணிகளுக்கு) பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.
இதில் குறிப்பாக ப்ராசஸ் அசோசியேட் பணியிடம், வாடிக்கையாளர் சேவை மற்றும் வோய்ஸ்/நான்-வோய்ஸ் ப்ராசஸ்களில் பணியாற்றும் வகையில் இருக்கும். ஐடி சேவை துறையில் ஆரம்ப நிலை பணியாக இது பார்க்கப்படுகிறது.
யார் விண்ணப்பிக்கலாம்?
இந்த வாக்-இன் தேர்வில் கலந்து கொள்ள விரும்புவோர் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும், ஃபிரெஷர்களும் விண்ணப்பிக்கலாம், நல்ல கம்யூனிகேஷன் திறன் அவசியம் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
சில அறிவிப்புகளில், இன்ஜினியரிங் பட்டதாரிகள் சில ப்ராசஸ்களுக்கு தகுதியற்றவர்களாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
தேர்வு முறை
இந்த வேலைவாய்ப்பில், முன்பதிவு தேவையில்லை நேரடியாக வாக்-இன் மூலம் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம். பொதுவாக இத்தகைய தேர்வுகளில் கம்யூனிகேஷன் மதிப்பீடு, அடிப்படை தொழில்நுட்ப/ப்ராசஸ் புரிதல், நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு நடைபெறும்.
வேலையிடம் மற்றும் பணி விவரங்கள்
தேர்வு செய்யப்பட்டவர்கள், சென்னையில் (சோழிங்கநல்லூர், நாவலூர் போன்ற ஐடி மையங்கள்) பணியமர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.
மேலும், ரொட்டேஷனல் ஷிப்ட், இன்டர்நேஷனல் வோய்ஸ் ப்ராசஸ் போன்ற பணிச்சூழல்களுக்கும் தயாராக இருக்க வேண்டியுள்ளது.
கவனிக்க வேண்டியவை
வாக்-இன் தேர்வில் கலந்து கொள்வோர் புதுப்பிக்கப்பட்ட ரெஸ்யூம், அடையாள ஆவணங்கள், கல்வி சான்றிதழ்கள் கொண்டு வர வேண்டும். மேலும், குறிப்பிட்ட நேரத்தில் நேரில் வருவது முக்கியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் இந்த எச்எச்எல் டெக் வாக்-இன் வேலைவாய்ப்பு, ஃபிரெஷர்களுக்கு ஐடி சேவை துறையில் நுழைய ஒரு நேரடி வாய்ப்பாகும். முன் அனுபவம் இல்லாதவர்களுக்கும் திறந்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது, தொழில்வாழ்க்கையின் முதல் படியாக அமையும்.
