தங்க நகைகள் ஏற்றுமதி குறைவு: ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு பின்னடைவு!

Published On:

| By Santhosh Raj Saravanan

Gold jewellery exports down by 21.77 percent in April month

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதட்டம் காரணமாக இந்தியாவின் ரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் (Gold Jewellery) ஏற்றுமதி ஏப்ரல் மாதத்தில் 9.07 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாட்டின் ரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 222.64 கோடி அமெரிக்க டாலராக (ரூ. 20,825.01 கோடி) குறைந்துள்ளது. இந்தத் தகவலை ரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் (GJEPC) வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாட்டின் மொத்த ரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 244.85 கோடி அமெரிக்க டாலராக (ரூ. 20,952.26 கோடி) இருந்தது. ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவின் தலைவர் கிரீட் பன்சாலி கூறுகையில், “மேற்கு ஆசியாவில் தொடரும் மோதலே ஏற்றுமதி சரிவுக்கு முக்கியக் காரணம். இது உலகளாவிய விநியோகச் சங்கிலியைப் பாதித்துள்ளது. அமெரிக்காவிற்கான ஏற்றுமதியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.” என்றார்.

ADVERTISEMENT

மேலும், சுங்க வரிகள் குறித்து இன்னும் தெளிவு இல்லாததால் புவிசார் அரசியல் பதட்டங்களும் அமெரிக்காவிற்கான ஏற்றுமதியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கிரீட் பன்சாலி கூறினார். தரவுகளின்படி, வெட்டப்பட்டு மெருகூட்டப்பட்ட வைரங்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 1108.7 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 19.65 சதவீதம் சரிந்து 890.9 மில்லியன் அமெரிக்க டாலராகக் குறைந்துள்ளது.

ஆய்வகத்தில் மெருகூட்டப்பட்ட வைரங்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 110.4 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், இந்த ஆண்டு 15.53 சதவீதம் சரிந்து 93.2 மில்லியன் அமெரிக்க டாலராகக் குறைந்துள்ளது. தங்க ஆபரணங்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 1075.6 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், இந்த ஆண்டு 21.77 சதவீதம் சரிந்து 841.5 மில்லியன் அமெரிக்க டாலராகக் குறைந்துள்ளது.

ADVERTISEMENT

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சாதாரண தங்க நகைகளின் ஏற்றுமதியில் 47.06 சதவீதம் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளதாக ரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தச் சரிவின் காரணமாக, தங்க நகைகளின் ஏற்றுமதி வெறும் 341 மில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நம் நாடு 644.3 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்க நகைகளை ஏற்றுமதி செய்திருந்ததாக அந்தக் கவுன்சில் கூறியது.

இருப்பினும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெள்ளி நகைகளின் ஏற்றுமதியில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஜி.ஜே.இ.பி.சி அறிக்கையின்படி, கடந்த மாதம் வெள்ளி நகைகளின் ஏற்றுமதி 444 சதவீதம் என்ற வலுவான அதிகரிப்புடன் 268.3 மில்லியன் டாலரை எட்டியுள்ளது. அதேசமயம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இது 49.3 மில்லியன் டாலராக இருந்தது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share