“ஜென்டில்மேன் டிரைவர்” : அஜித்துக்கு விருது!

Published On:

| By Kavi

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார், திரைப்படங்களில் மட்டுமல்லாது கார் பந்தய உலகிலும் தனது முத்திரையைப் பதித்து வருகிறார்.

அவரது பன்முகத் திறமைக்கு வலுசேர்க்கும் வகையில், இத்தாலியின் வெனிஸ் நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் “ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025″விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எஸ்ஆர்ஓ மோட்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம்வழங்கிய இந்த விருதை நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்துடன் பங்கேற்று பெற்றுக்கொண்டார்.

தனது சொந்த கார் பந்தய நிறுவனமான “அஜித்குமார் ரேஸிங் அணி”மூலம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற பந்தயங்களில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார்.

ADVERTISEMENT

ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப்பில் அவரது அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது

அஜித்குமாரின் மனைவி ஷாலினி, இந்த விருது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.

ADVERTISEMENT

இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதையும் நடிகர் அஜித்குமார் பெற்றுக்கொண்டார்.

திரைப்படத் துறையில் அவரது பங்களிப்பு மற்றும் சமூக சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share