வெயில் காலம் ஆரம்பிச்சாலே “இந்த தடவை எங்கே போகலாம்?”ன்னு குடும்பக் கூட்டம் நடக்கும். Goa-வா? Delhi-யா? இல்ல ஒரு quick international trip-ஆ? ஆனா இப்போ அந்த discussion ஆரம்பிக்கறதுக்குள்ளே ஒரு silent shock — flight ticket rate.
“போறத விட வீட்டிலேயே இருந்தா நல்லதா?”ன்னு கேக்குற நிலைமை வந்துடுச்சு.
எரிபொருள் விலை ஏற்றம்… டிக்கெட் விலையில் நேரடி தாக்கம்
விமானம் ஓடுறதுக்கு முக்கியமான backbone — Aviation Turbine Fuel (ATF). இதோட விலை சர்வதேச கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்து ஏறிக்கிட்டே இருக்கு.
ஒரு airline-க்கு மொத்த செலவில் சுமார் 35–40% fuel-க்கு தான் போகும். ஒவ்வொரு சிறிய உயர்வும் கூட பெரிய நஷ்டமா மாறும்.
அதனால அந்த நஷ்டத்தை ஈடுகட்ட, airlines நிறுவனங்கள் டிக்கெட் விலையையே கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்த ஆரம்பிச்சு இருக்காங்க. இதோட நேரடி தாக்கம் நம்ம பாக்கெட்தான்.
‘Fuel surcharge’ — booking நேரத்துல வரும் surprise shock
ஒரு டிக்கெட் search பண்ணும்போது ஒரு விலை… payment page போனதும் இன்னொரு விலை. அந்த extra gap-க்கு முக்கிய காரணம் — Fuel Surcharge.oil price ஏறினா surcharge கூடும். last minute booking பண்ணினா இன்னும் அதிகம்.
இதுல worst பாதிக்கப்படுறவங்க அவசரமாக travel பண்ண வேண்டியவர்கள், family emergencies. “ஊருக்குப் போறதுக்கே இவ்வளவு யோசிக்கணுமா?”ன்னு பலரின் மனசு கஷ்டப்படுது.
வெளிநாட்டில இருக்குறவர்களுக்கு இது பெரிய சுமை
Abroad-ல வேலை பார்க்குறவர்களுக்கும், படிக்குற students-க்கும் இந்த விலை ஏற்றம் ரொம்ப heavy. ஒரு simple calculation — ticket price ஒரு மாத சம்பளத்துக்கு சமம் அல்லது அதையும் தாண்டி வர கூடிய நிலைமை வருவதற்கான வாய்ப்புகள் உருவாகிட்டு இருக்கு.
இதனால family functions skip பண்ண வேண்டியது இருக்கும், weddings miss பண்ணனும், family பாக்க வர கூட யோசிக்கணும். ‘வரணும் தான்… ஆனா எப்படி?’ன்னு helpless ஆக நிற்க கூடிய நிலைமை உருவாகிறது.
விமான நிறுவனங்களும் தப்பிக்க முடியாத சிக்கல்
இது passengers-க்கு மட்டும் பிரச்சனை இல்ல… airlines-க்கும் பெரிய பிரச்சனைதான். அவங்க fuel-efficient aircraft வாங்குறது, unnecessary weight குறைக்குறது, routes optimize பண்ணுறது அப்படின்னு பல மாதிரியான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், ஆனா fuel price control பண்ண முடியாத ஒரு விஷயம். இதனால சில airlines profit margin குறைஞ்சு, சில சமயம் loss-ல operate பண்ணுற நிலைமையும் உருவாகும்.
ரயில் பயணம் மீண்டும் முக்கியமாகிறது
இப்போ ஒரு interesting shift நடக்கும். நம்மில் பலருக்கு ‘Flight வேகமா போகும்… ஆனா overall time பாத்தா train-ம் okay தான்!’ அப்படின்னு யோசிக்க தோணும். Particularly Vande Bharat Express மாதிரி trains faster, comfortable, comparatively affordable. இதனால ‘budget travel = train’ ன்னு ஒரு புதிய mindset உருவாகும்.
இது டிக்கெட் பிரச்சனை மட்டும் இல்ல… ஒரு சங்கிலி தாக்கம்
Fuel price ஏறுதுன்னா flight ticket மட்டும் இல்ல, logistics cost, goods transport, services எல்லாத்துக்கும் effect வரும். அதாவது இன்று travel cost, நாளைக்கு overall living cost.
