காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக வருவதே திருநங்கை ப்ரித்திகா யாஷினியின் விருப்பம். அதற்கு முதல் படியாக தன்னை தயாரித்துக் கொண்டு சட்ட ரீதியாகப் போராடி தன்னுடைய பணி நியமனம் தொடர்பான சட்ட ஆணையைப் பெற்றார். சேலம் மாவட்டத்தில் 21 பேருக்கு உதவி காவல் ஆய்வாளர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதில் ஒருவர் திருநங்கை ப்ரித்திகா யாஷினி.
பணி நியமன ஆணை பெற்றிருக்கும் ப்ரித்திகா யாஷினி 26 -ம் தேதி வண்டலூர் ஊனமாஞ்சேரி காவல்நிலையத்தில் பயிற்சி சப் இன்ஸ்பெக்டராக பணியில் சேர்கிறார். ஒரு வருட பயிற்சியின் பின்னர் அவர் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பணி நியமனம் செய்யப்படலாம். நாட்டின் முதன் முதலாக ஒரு திருநங்கை தமிழகத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஆகியிருப்பதால் நாம் வாழ்த்துவோம்.
