ஈரோட்டில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த தோழிகள் இணைந்து ஒரே நேரத்தில் முதன்முறையாக இன்று (ஏப்ரல் 19) வாக்களித்தனர்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 19) நடைபெற்று வருகிறது. இதில் ஈரோட்டில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த தோழிகள் இணைந்து தங்களது வாக்கினை செலுத்தி உள்ளனர்.
ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி துவக்கப் பள்ளியில் பிரியதர்ஷனி, ஜவாஹாரா ருக்கையா, இலக்கிய சம்பத் ஆகிய மூன்று பெண்கள் தங்களது முதல் வாக்கினை செலுத்த வந்தனர். சிறுவயதில் இருந்தே மூவரும் தோழிகளாக இருந்து வந்துள்ளனர்.
இதுகுறித்து மூவரும் கூறியதாவது, “நாங்கள் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ ஆகிய மூன்று மதங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எங்களுக்குள் எந்த வேற்றுமையும் காண்பதில்லை.
வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய நாட்டின் பாரம்பரியத்தை பின்பற்றும் வகையில் நாங்கள் ஒற்றுமையுடன் தோழிகளாக இருந்து வருகிறோம். தற்போது முதல்முறையாக வாக்களிப்பதால், மூவரும் இணைந்து வந்து வாக்களித்துள்ளோம்.”எனத் தெரிவித்துள்ளனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மக்களவை தேர்தல் : தமிழ்நாட்டில் 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவு!
அரசு அலுவலர்கள் ஆதங்கம்… அரசாணையை வாபஸ் பெற்றது தமிழக அரசு!
மக்களவை தேர்தல் : தமிழ்நாட்டில் 5 மணி வாக்குப்பதிவு நிலவரம்!