வைஃபை ஆன் செய்ததும், “கனவு காணும் வாழ்க்கை யாவும்…கலைந்து போகும் கோலங்கள்”னு பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. எலக்ஷன்ல எல்லாரும்தானே கனவு காண்கிறாங்க.. நீர் யாரை சொல்ல போறீரு..
அதென்னமோ உண்மைதான்.. “ஆசைகள் என்ன ஆணவம் என்ன”ன்னு எலக்ஷன்ல எல்லா பக்கமும் தெரியுதுதான்..
எலக்ஷன்ல ஜெயிக்கிறது ஒரு பக்கம் ஆட்சியையே பிடிச்சுட்ட மாதிரிதான் எடப்பாடி ரொம்ப ‘ஆக்டிவ்வா’ இருக்காருய்யா..
என்னய்யா சொல்றீரு?
ஆமாய்யா.. நாமினேஷன் எல்லாம் முடிஞ்சு ஒன்றிரண்டு இடங்களைத் தவிர பெரும்பாலான வேட்பு மனுக்களை ஏத்துகிட்டாங்க இல்லையா.
இப்பதான் பல தொகுதிகளில்ல அதிமுக தொண்டர்கள் ‘ஸ்பீடை’ காட்டிகிட்டு இருக்காங்க.. எப்படியும் ஜெயிப்போம்னு அந்த தொண்டர்கள் களமிறங்கி வேலை செய்யுறதை நம்ம விசிட்ல பார்க்க முடிஞ்சது..
அதே நேரத்துல எடப்பாடி பழனிசாமி என்ன செய்யறாருன்னு விசாரிச்சப்ப, “அவரு போற இடத்துல எல்லா வேட்பாளர்கள்கிட்ட நீங்க நல்லா வேலை செய்யுங்க.. ஜெயிச்சா நீங்கதான் மந்திரி.. நல்லா செலவு பண்ணுங்க”ன்னு நம்பிக்கையை விதைச்சுவிடுறாரு… இப்படி ’நீங்க மந்திரியாகிடுவீங்க’ன்னு எடப்பாடி வாக்குறுதி கொடுத்தவங்க எண்ணிக்கையே 60-க்கும் அதிகம்”னு சொல்றாங்க..
அதோட ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் போனடிச்சு, “நீங்க ஹோம் செக்ரட்டரி ஆகுறீங்களா? நீங்க சீப் செக்ரட்டரி ஆகுறீங்களா?”ன்னு கேட்டுட்டு, “இப்பவே நீங்க ஓகேன்னு சொன்னா எலக்ஷன் கமிஷனுக்கு எழுதிக் கொடுப்போம்.. அப்புறமா நம்ம ஆட்சிதானே வரப்போகுது.. நீங்களே அந்த பொறுப்பிலேயே இருந்துக்கலாம்”னும் சொல்றாராம்..
அப்படி எல்லாம் செஞ்சுட முடியுமா என்ன?
இப்ப 4 நாட்களுக்கு முன்னாடி டிஜிபி பொறுப்புல இருந்த வெங்கட்ராமனை மாத்திட்டு சந்தீப்ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டாரு.. மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன், தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ், மேற்கு மண்டல ஐஜி சரவண சுந்தர் எல்லாம் மாத்தப்பட்டாங்க.. இது எல்லாம் தேர்தல் கமிஷன் போட்ட ஆர்டர்.
இந்த தடாலடி டிரான்ஸ்பருக்கு எல்லாம் பின்னணி என்னான்னா, “இந்த அதிகாரி இப்படி சார்பா செயல்படுறாரு.. அப்படி ஒருதலைபட்சமா இருக்கிறாரு”ன்னு போன கம்ப்ளெயிண்ட்தான்.. இந்த பின்னணியில இருப்பதும் எடப்பாடிதானாம்..
ஆனா இதே கோதாவுல சீப் செக்ரட்டரியை மாத்துங்க, ஃபைனான்ஸ் செக்கரட்டரி உதயசந்திரனை மாத்துனுங்க எடப்பாடி செஞ்ச முயற்சிகளை யாரும் கண்டுக்கவும் இல்லையாம்..
இதை பத்தி ஐஏஎஸ் அதிகாரிகள் வட்டாரத்துல விசாரிச்சப்ப,” எடப்பாடி இப்படி பேசுனாலும் சில ஆபீசர்ஸ், “நோ சார்.. எனக்கு அந்த போஸ்டிங்ல இன்ட்ரஸ்ட் இல்லைங்களே”ன்னு மறுத்திருக்காங்க..
இன்னும் சில பேர், “எங்கசார் ஹெல்த் ஒத்துழைக்கலை.. நான் எங்கே போறது”ன்னு சொல்லி இருக்காங்க.. அதே மாதிரி, “குடும்பத்துல கொஞ்சம் இஸ்யூஸ் இருக்கு சார்.”ன்னும் கூட சொல்லி இருக்காங்க” என்கின்றனர்.
ஏன்னா, “அதிகாரிகளைப் பொறுத்தவரைக்கும் மறுபடியும் திமுகதான் ஆட்சி அமைக்கும்னு நினைக்கிறாங்க.. அதனால எடப்பாடி பேசுனதுக்கு பதில் மட்டும் சொல்லி இருக்காங்க”ன்னு சொல்றாங்க..
ஓஹோ.. வேறு யாரு எல்லாம் என்ன கனவுல இருக்காங்க?
கரெக்ட்டா பாயிண்ட்டுக்கு வந்தாச்சு போல.. அதிமுக கூட கூட்டணி வெச்சிருக்கிற பாஜக ‘தலைகள்’, நிச்சயமாக அதிமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்க சான்ஸ் இல்லை.. கூட்டணி அமைச்சரவைதான் அமையப் போகுது நினைக்கிறாங்க..
குறிப்பா பாஜகவுல எல். முருகன், நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் இவங்க எல்லாம் கூட இருக்கிற நெருக்கமானவங்க கிட்ட, ”கூட்டணி அமைச்சரவைன்னு வந்துட்டாலே நாமதான் ‘துணை முதல்வர்’னு ,மனம் விட்டே சொல்றாங்களாம்யா.. அந்த கனவுலதான் இவங்க எல்லாம் தொகுதிகளில்ல ‘தீ’யா வேலை செஞ்சுகிட்டு இருக்காங்களாம்.. செலவும் தண்ணியா செய்யுறாங்களாம்
ஆமா எல்.முருகன் துணை முதல்வராகிறான்னு வெச்சுக்கோங்க அப்ப..
அதுசரி.. சுத்திவளைச்சு அங்கதானே.. ஆமாய்யா.. மத்திய அமைச்சர் எல்.முருகன் இந்த டைம் அவிநாசி தொகுதியில போட்டி போடுறாரு.. அவரு ஜெயிச்சுட்டா, ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செஞ்சுடுவாரு.. மத்திய அமைச்சர் பதவியும் காலியாகிடும்.. அந்த ‘தமிழ்நாடு’ ராஜ்யசபா எம்பி பதவி கோட்ட, அந்த ’மத்திய அமைச்சர்’ பதவியை அப்படியே வாங்கிடலாம்னு அண்ணாமலைக்கு ஒரு ப்ளான் இருக்காம்.. எல். முருகன் இடத்துக்கு நாம போயிட முடியும்னு அண்ணாமலை ரொம்பவே நம்பிக்கையா இருக்கிறாராம்..
இதை தன்னோட ‘அன்பு கூட்டத்துல’ ஷேர் செஞ்சும் இருக்கிறாரு அண்ணாமலை.. ‘அண்ணா நினைச்சா செஞ்சுடுவாரு’ன்னு அந்த ‘அன்புகூட்டமும் மலைபோல எலக்ஷன் ரிசல்ட்டை எதிர்பார்த்துகிட்டு இருக்குதய்யா என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
