ட்விட்டரை கைவிட்டு விளையாட்டு அணியை வாங்கும் எலான் மஸ்க்

Published On:

| By Jegadeesh

இங்கிலாந்து கால்பந்து அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

உலகப் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்து பின்பு அதிலிருந்து பின்வாங்கினார். ட்விட்டரில் உள்ள போலிக்கணக்குகள் பற்றிய தரவுகள் இல்லாததால் இந்த முடிவை எடுப்பதாக அவர் அறிவித்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில், உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்ட அணிகளில் ஒன்றான மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தெளிவாகச் சொல்வதானால், நான் குடியரசுக் கட்சியின் இடது பாதியையும் ஜனநாயகக் கட்சியின் வலது பாதியையும் ஆதரிக்கிறேன் என்றும் மற்றொரு பதிவில் நான் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப்போகிறேன் என்றும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

மான்செஸ்டர் யுனைடெட் அணி 20 முறை இங்கிலாந்தின் சாம்பியனாகவும் , மூன்று முறை ஐரோப்பிய கோப்பையையும் வென்று சாதனை படைத்துள்ளது. இந்த அணி கால்பந்து உலகின் சிறந்த கிளப் அணி என்பது குறிப்பிடத்தக்கது. மான்செஸ்டர் யுனைடெட் அணியின் மொத்த சந்தை மதிப்பு ரூ.16,474 கோடி ஆகும்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ADVERTISEMENT
Photo of author
Jegadeesh
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share