திண்டுக்கல் தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ யார்?

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

 மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)

ADVERTISEMENT

 திண்டுக்கல் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

சாதி வாரியான வாக்காளர்கள்

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

திண்டுக்கல் தொகுதி திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் வென்ற தொகுதியாகும்.

திண்டுகல் மக்களவை தொகுதியில் 4 முறை வென்ற சி.சீனிவாசன், 2 முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர். அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்துள்ளார். அதிமுகவின் பொருளாளராக இருக்கிறார். இந்த முறையும் இங்கே போட்டியிடுகிறார். 2021 தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் எம்.பாண்டியை 17,747 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இந்தமுறை திண்டுக்கல்லில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறவர் பழனி தொகுதி எம்.எல்.ஏ. ஐபி செந்தில்குமார். திண்டுக்கல் தலைநகரில் திமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தனது மகன் ஐபி செந்தில்குமாரையே களத்தில் நிறுத்தி இருக்கிறார் அமைச்சர் ஐ.பெரியசாமி.

பழனியில் எளிதாக ஜெயிக்கும் வாய்ப்பு இருந்ததால் தொடக்கத்தில் ஐபி செந்தில்குமார் திண்டுக்கல்லில் போட்டியிட தயங்கினாலும் அப்பாவின் பேச்சை கேட்டு களம் காண்கிறார்.

தவெக சார்பில் நஜீர் ராஜா, நாதக சார்பில் முத்தரசி ஆகியோர் களம் காண்கின்றனர்.

நமது சர்வே முடிவுபடி, 

திமுக-40%
அதிமுக-38%
தவெக-13%
நாதக- 8% வாக்குகள் பெறும்

அதிமுக கொஞ்சம் லீடிங்கில் இருந்தாலும் களம் கடுமையான போட்டியாக இருக்கிறது. திமுக வேட்பாளர் ஐபி செந்தில்குமார் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? திண்டுக்கல் | Dindigul | Minnambalam Mega Survey Results 2026 | DMK
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share