வைஃபை ஆன் செய்ததும், ”குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்” பாடலை ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா இன்னைக்கு தத்துவத்தோடு ஆரம்பிக்கிறீரு..
பட்டுக்கோட்டையார் வரிகள் பிரமிக்க வைக்குதே.. அதைவிடுமய்யா எலக்ஷன் கிரவுண்ட்ல நடக்குற விஷயங்களை பேசுவோம்..
அதிமுகவில இருந்து வருவோம்.. கள நிலவரம் எப்படி இருக்குன்னு எடப்பாடியும் சர்வேக்களை எடுத்துகிட்டுதான் இருக்காரு.. ஆனா இந்த ரிப்போர்ட்டுகளில்ல எடப்பாடி எதிர்பார்க்கிற சில ‘பெல்ட்’டுகளில்ல ரிசல்ட் அப்படி ஒன்னும் திருப்தியா இல்லையாம்.. ஒவ்வொரு சர்வேயும் இதையே திரும்ப திரும்ப சொல்லுதுன்னு வருத்தப்பட்ட எடப்பாடி அடுத்ததாக சில மூவ்களை செஞ்சிருக்காருய்யா..
அதுல ஒன்னுதான் அதிகாரிகளுக்கு வலை வீசுனது.. போன ஏப்ரல் 7-ந் தேதி நைட் 7.10 மணிக்கு நாமதான் , “’கெத்தா’ வலை விரித்த இபிஎஸ்.. ’கொத்தா’நழுவிய ஐஏஎஸ் அதிகாரிகள்”னு எழுதி இருந்தோம்..
ஐஏஎஸ் அதிகாரிகள்கிட்ட சீப் செக்கரட்டரியாகுறீங்களா? ஃபைனான்ஸ் செக்கரட்டரியாகுறீங்களா?ன்னு எடப்பாடி கேட்டுகிட்டு இருக்காருன்னு நாம எழுதி 24 மணி நேரத்துக்குள்ள சீப் செக்கரட்டரி முருகானந்தத்தை மாத்திட்டாங்க.. புது சீப் செக்கரட்டரியா சாய்குமாரை எலக்ஷன் கமிஷன் போட்டிருக்கு.. அதே மாதிரி விஜிலென்ஸ் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தை மாத்திட்டு சந்தீப் மிட்டலை நியமிச்சிருக்கு எலக்ஷன் கமிஷன்..
நாம சொன்னோம்ல ஐஏஎஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு எடப்பாடி பேசுனாருன்னு.. அதுல ஒருத்தர்தான் சாய்குமார் .. 2018-ல் எடப்பாடி சிஎம்.. அப்ப அவரோட முதன்மை தனிச் செயலரா இருந்தவரு சாய்குமார்.. அவர்கிட்ட, “நீங்க சீப் செக்கரட்டரியாகுறீங்களா?:”ன்னு எடப்பாடி கேட்டார், ஆனா, “எங்க அக்கா பொண்ணுக்கு கல்யாணம் வெச்சிருக்கோம்..”னு சொல்லி முதல்ல தயக்கம் காட்டினாரு சாய்குமார்.. ஆனாலும் அவரை கன்வீன்ஸ் பண்ணிட்டாரு எடப்பாடி.. அதேபோல எடப்பாடி பீரியட்ல டெல்லியில இருந்து தமிழ்நாட்டு பணிக்கு மாற்றப்பட்டவர்தான் சந்தீப் மிட்டல்..
இந்த நியமனங்களுக்கு பின்னாடி எடப்பாடி இருக்கிறது அப்பட்டமா தெரிஞ்சதாலதான் சிஎம் ஸ்டாலின், “பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் தேர்தல் நடக்கிறது. அங்கு டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை. பாஜக பிராக்சி ஆட்சி நடத்திய பிஹார் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது. அங்கும் டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் கண்ணை உறுத்தியிருக்கிறார்கள். அவர்களை பாஜகவின் தூண்டுதலில் மாற்றியிருக்கிறது”ன்னு கண்டனம் தெரிவிச்சாரு..
அதேபோல மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரமும், “அதிகார வரம்பை மீறிய செயல். தேர்தல் ஆணையத்தின் செயல் கடும் கண்டனத்திற்குரிய செயல்.. தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்திற்கு வரம்பிருக்கிறது. தன்னிச்சையான (arbitrary) நியாயமற்ற (unfair) செயல் அதிகார வரம்பை மீறிய செயல்”னு அவருக்கே உரிய பாணியில கடுமையா விளாசியிருக்காருய்யா..
ஆமா… இப்ப விஜிலென்ஸ் டிஜிபியை புதுசா போட்டிருக்கிறதால ஏதாவது திடீர் பரபரப்புகள்?
உமக்கு தீனி வேணும்போல.. இதை பத்தி விசாரிச்சோம்யா.. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள்கிட்ட பேசும் போது, “அமித்ஷாகூட சேர்ந்துகிட்டு வெற்றி பெறனும் அப்படிங்கிறதுக்காக எடப்பாடி எந்த எக்ஸ்ட்ரீம் லெவலுக்கும் போவாருன்னுதான் இதெல்லாம் காட்டுது.. இன்னும் 20 நாள் இருக்கு.. நீங்க எல்லாம் ரொம்ப கவனமா இருங்க..”ன்னு அலர்ட் செஞ்சிருக்காராம்..
அங்கிட்டு அமித்ஷா உத்தரவால அமலாக்கத்துறை, வருமான வரித்துறைன்னு டிபார்ட்மெண்ட்ஸ் எல்லாம் சில அமைச்சர்கள், அவங்க கூட இருக்கிறவங்களுக்கும் சேர்த்து வலையை விரிச்சு வெச்சிருக்காங்கன்னும் சொல்றாங்கய்யா
சரிய்யா. எடப்பாடியோட வேற மூவ்ஸ் இருக்கா?
இருக்கே.. இந்த தேர்தலைப் பொறுத்தவரைக்கும் மாஜி மந்திரிகள் தலையிலதான் எலக்ஷன் செலவை கட்டிவிடலாம்னுதான் நினைச்சுகிட்டு இருந்தாரு எடப்பாடி.. சர்வே முடிவுகளை எல்லாம் பார்த்துட்டு, ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ10 கோடி கட்சி பணத்தை கொடுத்துவிட்டிருக்காராம் எடப்பாடி.. ஒரு ஓட்டுக்கு ரூ500- கட்சி பணம், இன்னொரு ரூ500 வேட்பாளரோட சொந்த பணம்னு மொத்தம் 1 ஓட்டுக்கு ரூ1,000 கொடுக்கிறதுதான் எடப்பாடி ப்ளானாம்.. இதுல என்னான்னா அதிமுகவோட கூட்டணி கட்சிகள் நிற்கிற தொகுதிகளுக்குமே இந்த ரூ10 கோடி சப்ளையாகி இருக்குதாம்யா..
என்ன கணக்குய்யா இந்த 1 ஓட்டுக்கு ரூ1,000-ம்னு நாம விசாரிச்சப்ப, “திமுக அப்படிதான் ஸ்கெட்ச் போட்டிருக்குன்னு சொன்னதால எடப்பாடியும் அந்த முடிவுக்கு வந்துட்டாரு”ன்னு சொல்றாங்கய்யா..
திமுக சைடுல என்ன நிலவரம்யா?
திமுக வட்டாரங்களில்ல விசாரிச்சப்ப, “கூட்டணி கட்சிகள் கொஞ்சம் வருத்தமா இருக்காங்களாம்.. ஏன்னா சொன்னபடி எலக்ஷன் செலவுக்கான வாக்குறுதியை முழுசா நிறைவேத்தலையே..”ன்னு ஆதங்கப்பட்டுக்கிறாங்களாம்.. சில கட்சிகளின் லீடர்ஸ் புலம்பவே செய்யுறாங்கய்யா என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
