பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் நேற்று (அக்டோபர் 3) நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக விஜய் தேவரகொண்டா உள்ளார். அதேபோன்று தெலுங்கு, தமிழ், இந்தி என பான் இந்தியா நடிகையாக ராஷ்மிக மந்தனா வலம் வருகிறார்.
தெலுங்கில் இருவரும் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் அவர்களின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து டியர் காம்ரேட் படத்திலும் இருவரும் இணைந்து நடித்தனர்.
அதன்பின்னர் ராஷ்மிக மந்தனா – விஜய் தேவரகொண்டா ஜோடி காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் அடிக்கடி செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், இருவருக்கும் ஐதராபாத்தில் உள்ள நடிகர் விஜய் தேவரகொண்டாவின் இல்லத்தில் நேற்று நிச்சயதார்த்தம் ரகசியமாக நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திருமணம் நடைபெறும் எனவும் தெலுங்கு திரையுலகில் கூறப்படுகிறது.
இதுகுறித்து ரசிகர்கள் சமூகவலைதளங்களில் மகிழ்ச்சி தெரிவித்து வரும் நிலையில், ராஷ்மிகா மந்தனா அல்லது விஜய் தேவரகொண்டா தரப்பில் இதுதொடர்பாக எதையும் உறுதிப்படுத்தவில்லை.
இதற்கிடையே தனது நடிப்பில் உருவாகியுள்ள தம்மா திரைப்படம் வரும் அக்டோபர் 21ஆம் தேதி வெளியாக உள்ள ரசிகர்களை அடுத்தடுத்து சந்திக்க உள்ளது மகிழ்ச்சியளிப்பதாக நடிகை ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
