சர்க்கரை நோயாளிகள் கரும்பு ஜூஸ் குடிக்கலாமா?.. கோடையில் அருந்த வேண்டிய பானங்கள் லிஸ்ட்!

Published On:

| By Santhosh Raj Saravanan

diabetic patient can drink sugarcane juice

கரும்புச் சாறு குடிப்பது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?, கோடையில் என்ன சாப்பிடலாம் என்பது குறித்துப் பார்க்கலாம்.

கோடைக் காலத்தில் கரும்பு ஜூஸ் அருந்துவது வெயிலும் மிகுந்த நிவாரணம் அளிக்கிறது. சாலையோரத்தில் எளிதாகக் கிடைக்கும் கரும்பு ஜூஸை மக்கள் மிகவும் விரும்பி அருந்துகின்றனர். கரும்பு ஜூஸ் சுவையானது மட்டுமின்றி உடலுக்கு உடனடி ஆற்றலை (Instant energy drink for body) அளிக்கிறது. ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பு சுவையுள்ள கரும்பு ஜூஸ் பாதுகாப்பானதா, அவர்கள் என்ன அருந்தலாம் என்ற கேள்விகள் நம் மனதில் எழாமல் இல்லை. அதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரும்பு ஜூஸில் உள்ள சத்துக்கள்

கரும்புச் சாற்றில் இயற்கையான சர்க்கரைகள் உள்ளன, அவை உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகின்றன. கரும்பு  சாற்றில் இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம் (Nutrients in sugarcane juice) மற்றும் சில ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளன. அது நமது உடலுக்கு நன்மை அளிக்கிறது.

ADVERTISEMENT

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்

கரும்பு ஜூஸில் உள்ள இயற்கையான சர்க்கரைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு பிரச்சனையாக இருக்கக்கூடும். ஏனெனில் அவை ரத்த சர்க்கரை அளவை (increase sugar levels) வேகமாக அதிகரிக்கக்கூடும். அதேபோல கரும்புச் சாறு சற்றே அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது, இது ரத்த சர்க்கரையை வேகமாக அதிகரிக்கக்கூடும். கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை அளவு உள்ளவர்கள் கரும்புச் சாற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். கரும்புச் சாறு அருந்த வேண்டும் என்றால்  மருத்துவரை ஆலோசித்த பின்னரே மிகக் குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் என்ன அருந்தலாம்

சர்க்கரை நோயாளிகள் கரும்புச் சாற்றிற்குப் பதிலாக ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவும் மற்ற பானங்களை அருந்தலாம். குறிப்பாக சர்க்கரை சேர்க்காத எலுமிச்சைச் சாறு, மோர், இளநீர், பச்சைத் தேநீர் மற்றும் சர்க்கரை சேர்க்காத மூலிகை டீ ஆகியவற்றைக் (What can diabetics drink) குடிக்கலாம். பாகற்காய், தக்காளி அல்லது வெள்ளரிக்காய் சாறு போன்ற காய்கறிச் சாறுகளும் நன்மை பயப்பதாகக் கருதப்படுகின்றன. ஏனெனில் அவற்றில் சர்க்கரை குறைவாகவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தும் உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share