வருகிற சட்டமன்றத் தேர்தலுக்காக திமுகவில் ஏழு மண்டலங்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒவ்வொரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டதை முதன்முதலாக மின்னம்பலத்தில் வெளியிட்டிருந்தோம். Dealing with Nainar list went to Stalin
இந்நிலையில், இந்த மண்டல பொறுப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களில் ஆலோசனைக் கூட்டங்களை ஆரம்பித்து விட்டனர்.
அந்த வகையில் மே 14 ஆம் தேதி, நெல்லை மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் துணை பொதுச்செயலாளரும் மண்டலப் பொறுப்பாளருமான கனிமொழி எம்பி கலந்து கொண்டார்.

சமீபகாலமாக நெல்லை மாவட்ட திமுக சலசலப்புகளை வழக்கமாக்கிக் கொண்ட நிலையில்… கனிமொழி கலந்து கொண்ட முதல் ஆலோசனை கூட்டத்திலும் சலசலப்புக்கு பஞ்சமில்லை.
நெல்லை மத்திய மாவட்டச் செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரான அப்துல் வகாப், இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தனக்கு வேண்டப்பட்ட நிர்வாகிகளை மட்டுமே அழைத்ததாக, கனிமொழியிடமே நேருக்கு நேர் முறையிட்டனர்.
நெல்லையில் தனியார் ஹோட்டலில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நெல்லை மாநகராட்சி மேயர் கிட்டு ராமகிருஷ்ணன், துணை மேயர் ,மகளிர் தொண்டரணி மாநில துணைச் செயலாலார் விஜிலா சத்யானந்த், மாவட்ட அவைத் தலைவர் முருகன், மாவட்ட பொருளாளர் வண்ண சேகர், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் ராஜவர்மன், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை. மேலும், நெல்லை மாநகராட்சியை சேர்ந்த 25 பெண் கவுன்சிலர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரான, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துச் செல்விக்கு இந்த கூட்டம் பற்றி கடைசி நேரத்தில் தான் தகவல் தெரிவிக்கப்பட்டது. Dealing with Nainar list went to Stalin
அவர் உடனடியாக கனிமொழி எம்பி யை தொடர்பு கொண்டு, ‘அக்கா… எனக்கு கூட்டம் பற்றி இப்போதுதான் தகவல் தெரியும். நான் சங்கரன்கோவிலில் இருந்து வருவதற்கு கொஞ்சம் தாமதம் ஆகிவிடும். வரட்டுமா?’ என்று கேட்டிருக்கிறார். Dealing with Nainar list went to Stalin
கனிமொழியும், ‘ நான் வருவதற்கு 11 மணி ஆகிவிடும். நீங்க கிளம்பி வாங்க’ என்று சொல்ல… அவசர அவசரமாக திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் முத்துச்செல்வி இந்த கூட்டத்திற்கு காலை 11 மணிக்கு வந்து சேர்ந்தார். Dealing with Nainar list went to Stalin
மேலும் தங்களுக்கு அழைப்பில்லை என்ற போதும் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்குக்கு வந்த நிர்வாகிகள் கனிமொழியிடமே மத்திய மாவட்ட செயலாளரான வஹாப் பற்றி முறையிட்டனர்.
அப்போது வஹாப்பும் கனிமொழி முன்பாகவே தனக்கே உரிய பாணியில் நிர்வாகிகளை எச்சரித்தார்.
அனைவரது புகார்களையும் குறித்துக்கொண்ட கனிமொழி பேசும்போது, “இங்கே நடந்தவை பற்றி தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்’ என்று கூறினார்.

மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய திமுக நிர்வாகிகள்,”திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரான நயினார் நாகேந்திரன் தற்போது பாஜக மாநில தலைவராகிவிட்டார். ஏற்கனவே அவருடன் திமுக நிர்வாகிகள் நல்ல தொடர்பில் உள்ளனர். இப்போது அந்த உறவு மேலும் வலுவடைந்து இருக்கிறது. இதனை திமுக தலைமை உணர்ந்து, நயினார் நாகேந்திரனுடன் டீலிங்கில் இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர். Dealing with Nainar list went to Stalin
அப்போது கனிமொழி, “அரசியல் ரீதியாக நாகரீகமாக பழகுவது என்பது வேறு. சொந்தக் கட்சிக்கு எதிரான வகையில் தொடர்பு வைத்திருப்பது என்பது வேறு. வருகிற சட்டமன்றத் தேர்தலில் நயினார் நாகேந்திரனை நாம் நிச்சயம் தோற்கடிப்போம். பாஜக முன்னாள் மாநிலத் தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜன் எனக்கு நல்ல நண்பர் தான். முதல்வரும் அவரோடு பழகுபவர்தான். அதே நேரம் தூத்துக்குடியில் தமிழிசையை நான் தோற்கடித்தது போல, நயினார் நாகேந்திரனையும் திருநெல்வேலியில் தோற்கடிப்போம்’ என்று பேசினார் கனிமொழி.
அதே நேரம் நயினார் நாகேந்திரனுடன் தொடர்பில் இருக்கும் திருநெல்வேலி மாவட்ட திமுக நிர்வாகிகளின் பட்டியலையும் சேகரித்து நேற்றே திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ளார் கனிமொழி என்கிறார்கள் நெல்லை திமுக சீனியர்கள். Dealing with Nainar list went to Stalin
