தி கிரேட் நிக்கோபார் திட்டம்blue economy current affairs in tamil
- தி கிரேட் நிக்கோபார் தீவு (GNI) திட்டம், 2021 இல் தொடங்கப்பட்டது, இது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தெற்கு முனையில் செயல்படுத்தப்படும் ஒரு மெகா திட்டமாகும்.
- இது ஒரு டிரான்ஸ்-ஷிப்மென்ட் துறைமுகம், ஒரு சர்வதேச விமான நிலையம், டவுன்ஷிப் மேம்பாடு மற்றும் தீவில் 450 MVA எரிவாயு மற்றும் சூரிய சக்தி (solar energy) அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையத்தை மேம்படுத்துவதை உள்ளடக்கியது. blue economy current affairs in tamil
- இலங்கையில் கொழும்பிலிருந்து தென்மேற்கிலும்(southwest), போர்ட் கிள்ளான் (Port Klang) (மலேசியா) மற்றும் சிங்கப்பூர் தென்கிழக்கிலும்(southeast) ஏறக்குறைய சம தூரத்தில் உள்ள தீவின் சாதகமான நிலையைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அடையாளம் கண்ட NITI ஆயோக் அறிக்கையின் பின்னர் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
முக்கியத்துவம்:
- கூடுதல் இராணுவப் படைகள்,பெரிய மற்றும் அதிகமான போர்க்கப்பல்கள்,விமானங்கள், ஏவுகணை பேட்டரிகள் மற்றும் துருப்புக்களை அனுப்புவதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டது இந்த திட்டம்.
- தீவுக்கூட்டத்தைச் சுற்றியுள்ள முழுப் பகுதியையும் உன்னிப்பாகக் கண்காணிப்பது மற்றும் கிரேட் நிக்கோபாரில் வலுவான இராணுவத் தடுப்பைக் கட்டியெழுப்புவது இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது.
- தீவு மலாக்கா ஜலசந்திக்கு(Malacca Strait) அருகில் உள்ளது, இது இந்தியப் பசிபிக்பெருங்கடலுடன் இணைக்கும் முக்கிய நீர் வழிப்பாதையாகும், மேலும் ICTT கிரேட் நிக்கோபார் சரக்கு பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பிராந்திய (cargo transshipment)மற்றும் உலகளாவிய கடல்சார் பொருளாதாரத்தில் பங்கேற்க அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.blue economy current affairs in tamil
- வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகள் இந்தியாவின் வகுப்பமறை ( strategic)சார்ந்த மற்றும் பாதுகாப்பு நலன்களுக்கு மிகவும் முக்கியமானவை. ஏனெனில் சீன இராணுவம் (மக்கள் விடுதலை இராணுவ கடற்படை) இந்த முழு பிராந்தியத்திலும்(region) தனது இருப்பையும் செல்வாக்கையும் அதிகரிக்க முயல்கிறது.
- அந்தமான் & நிக்கோபார் தீவுகள் பிராந்தியத்தில் இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பிற்கு வகுப்பமறை ரீதியாக மிகவும் முக்கியமானவை என்பதால் இது இந்தியாவிற்கு கவலையை எழுப்புகிறது.
மாணவர்களுக்கான குறிப்பு:
- UPSC Civil Service GS-3 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
- UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group2 மற்றும் Group1 Prelimsக்கு உதவும்.
- சுற்றுச்சூழல் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
-வர்ஷா செல்வச்சந்திரன்
*இந்த செய்தித் தொகுப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக*.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
உங்கள் சேமிப்பை வைப்பு காப்பீடு காப்பாற்றுமா?
கிரேட் நிகோபார் திட்டம் : பாதிப்பிற்கு உள்ளாகும் 2 முக்கிய உயிரினங்கள்!