தமிழ்நாடு காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR – CECRI), பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களுக்காகத் தற்காலிக அடிப்படையில் 50 பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளது. இதில் டிகிரி, டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் முடித்தவர்களுக்குத் தனித்தனியான வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
யாருக்கெல்லாம் இந்த ஜாக்பாட்?
சீனியர் புராஜெக்ட் அசோசியேட் (Senior Project Associate – 04 இடங்கள்):
- தகுதி: பி.டெக் (பயோடெக்னாலஜி) அல்லது எம்.எஸ்சி (கெமிஸ்ட்ரி) அல்லது கெமிக்கல்/மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து 2 முதல் 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
- சம்பளம்: 42,000 ரூபாய் மற்றும் HRA.
- வயது வரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
புராஜெக்ட் அசோசியேட் – II (Project Associate-II – 03 இடங்கள்):
- தகுதி: எம்.எஸ்சி (கெமிஸ்ட்ரி) முடித்து 2 ஆண்டுகள் ஆராய்ச்சி அனுபவம் அவசியம்.
- சம்பளம்: 28,000 ரூபாய் மற்றும் HRA.
- வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
புராஜெக்ட் அசோசியேட் – I (Project Associate-I – 36 இடங்கள்):
- தகுதி: எம்.எஸ்சி (கெமிஸ்ட்ரி / பிசிக்ஸ் / மெட்டீரியல் சயின்ஸ் / மைக்ரோபயாலஜி / டேட்டா சயின்ஸ் / ஏஐ) அல்லது பி.இ / பி.டெக் (கெமிக்கல் / மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / கம்ப்யூட்டர் சயின்ஸ்) முடித்திருக்க வேண்டும்.
- சம்பளம்: 25,000 ரூபாய் மற்றும் HRA.
- வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
புராஜெக்ட் அசிஸ்டென்ட் (Project Assistant – 07 இடங்கள்)
- தகுதி: பி.எஸ்சி (கெமிஸ்ட்ரி / பிசிக்ஸ்) அல்லது டிப்ளமோ (மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ்) முடித்திருக்க வேண்டும்.
- சம்பளம்: 20,000 ரூபாய் மற்றும் HRA.
- வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
நேர்காணல்: விருப்பமுள்ளவர்கள் அசல் சான்றிதழ்களுடன் வரும் மே 21 மற்றும் மே 22, 2026 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் நேரடியாகக் கலந்து கொள்ளலாம்.
நேர்காணல் இடம்: CSIR-CECRI, காரைக்குடி.
வயது வரம்பை செக் பண்ணுங்க
மேலும் அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. இதை மறக்காம அப்ளிகேஷன்ல செக் பண்ணுங்க.
நீங்க காலேஜ்ல பண்ண புராஜெக்ட் விவரங்களை ஒரு ‘ப்ரோபைல்’ மாதிரி தயார் பண்ணி வச்சுக்கோங்க. அது நேர்காணல்ல உங்களுக்கு கூடுதல் மார்க் வாங்கித் தரும். இது ஒரு தற்காலிகப் பணி என்றாலும், சிஎஸ்ஐஆர் (CSIR) போன்ற நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவம், பின்னாளில் நீங்கள் பெரிய நிறுவனங்களுக்குச் செல்லும்போது ஒரு மெகா ‘சர்டிபிகேட்’ ஆக அமையும்.
காரைக்குடியிலயே இருந்துக்கிட்டு ஒரு மத்திய அரசு ஆராய்ச்சி நிறுவனத்துல கால் பதிக்க இது ஒரு அரிய வாய்ப்பு. தகுதியுள்ள தம்பி, தங்கச்சிகள் மே 21-22 தேதிகள்ல காரைக்குடியில ‘மாஸ்’ காட்டுங்க.
