மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் வித்தியாசமான நிலையை உருவாக்கியுள்ளது.
எண்ணெய் எங்கிருந்து வருகிறது, எந்த வழியாகச் செல்கிறது என்பதே தற்போது அதன் விலையைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறியுள்ளது. குறிப்பாக, கடல்வழிப் போக்குவரத்தில் ஏற்படும் அபாயம் காரணமாக சில கச்சா எண்ணெய் வகைகள் பெரும் தள்ளுபடியில் விற்கப்படுகின்றன. அதே நேரத்தில், தடையின்றி சந்தையை அடையும் எண்ணெய் அதிக விலைக்கு செல்கிறது.
பிரெண்ட் விலை எங்கே சென்றது?
பிப்ரவரி 28-ம் தேதிக்குப் பிறகு பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஜூலை 2-ம் தேதி 70.14 டாலராக இருந்த ஒரு பீப்பாய் பிரெண்ட் விலை, செப்டம்பர் 11-ல் 109.97 டாலரைத் தொட்டது. இது சுமார் 57 சதவீத உயர்வாகும்.
ஹார்முஸ் நீரிணை ஏற்படுத்தும் நெருக்கடி
பாரசீக வளைகுடாவில் இருந்து வெளியேறும் எண்ணெய்க்கு தற்போது ஹார்முஸ் நீரிணை மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஈராக் நாட்டின் Basrah Medium எண்ணெய், UAE-யின் Murban கச்சா எண்ணெயுடன் ஒப்பிடும்போது ஒரு பீப்பாய்க்கு 43.06 டாலர் வரை தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுவதாக Argus தரவுகள் தெரிவிக்கின்றன.
கத்தாரின் Al-Shaheen எண்ணெயும் Murban-ஐ விட 24.92 டாலர் தள்ளுபடியில் உள்ளது.
ஆசிய நாடுகளுக்கு அதிகரிக்கும் செலவு
மத்திய கிழக்குக்கு வெளியே உற்பத்தியாகும் கச்சா எண்ணெய்க்கு தற்போது கூடுதல் விலை கிடைக்கிறது. ஆசிய சந்தைகளுக்கு அருகில் இருக்கும் எண்ணெயின் விலை மேலும் உயர்ந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் Pyrenees கச்சா எண்ணெய் செப்டம்பர் 11-ல் 138.04 டாலராக மதிப்பிடப்பட்டது. இது பிரெண்ட் விலையை விட 33.43 டாலர் அதிகம். போக்குவரத்து செலவு மற்றும் கப்பல் கட்டண உயர்வும் ஆசிய சுத்திகரிப்பு நிறுவனங்களின் செலவுகளை அதிகரித்து வருகின்றன.
