CPI Protests Against CM Vijay: சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்கப்படும் என்ற முதல்வர் விஜய் அரசின் அறிவிப்புக்கு எதிராக ஆளும் தவெக அரசுக்கு ஆதரவு தரும் இந்திய கம்யூனிஸ் கட்சி (சிபிஐ) இன்று (செப்டம்பர் 12) சென்னையில் போராட்டம் நடத்தியது.
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்க 9 கிராம மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விஜய் அரசின் இந்த திட்டத்துக்கு காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்துள்ளன.


இந்நிலையில் விஜய் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) இன்று போராட்டத்தில் ஈடுபட்டது. சென்னை மெரினா கடற்கரை பட்டினப்பாக்கம் பகுதியில் போலீசார் தடையை மீறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
