முன்னாள் எம்பி விஸ்வநாதன் மேலூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
நீண்ட இழுபறிக்கு பின்னர் நேற்று முன்தினம் 27 இடங்களுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் தலைமை அறிவித்தது.
ஆனால் மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் காஞ்சிபுரம் முன்னாள் எம்பி விஸ்வநாதன் மேலூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார் என்று அக்கட்சி தேசிய பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால்.
2009 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினராக இருந்தவர் விஸ்வநாதன்.
காங்கிரஸில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் கேரள மாநில பொறுப்பாளராகவும் தெலுங்கானா மாநில பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் பிரதமரின் வருகையின் போது மதுராந்தகத்தில் கருப்புக் கொடி காட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
