வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை திடீர் குறைப்பு!

Published On:

| By Minnambalam Desk

commercial LPG gas Price

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.58 குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்காவின் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஆகியவற்றை பெட்ரோலிய நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. Commercial LPG Cylinder

ADVERTISEMENT

இந்த நிலையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.58 குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் படி சென்னையில் வணிக பயன்பாட்டுக்காக சமையல் எரிவாயு சிலிண்டர் (19 கிலோ எடை) ரூ1,822.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.1,665-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share