கோவை தெற்கு தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ யார்?

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

 மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)

ADVERTISEMENT

 கோவை தெற்கு வாக்காளர்கள் – மொத்தம் -1,86,509

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

சாதி வாரியான வாக்காளர்கள்

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

கோவை தெற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் இந்த தொகுதியில் பாஜக ஓரளவுக்கு வாக்குகள் வாங்கும். 

பொற்கொல்லர்கள் மிகுந்த செட்டி வீதி பகுதியில் திமுக ஆட்சியில் பொற்கொல்லர்களுக்கு என தனி பூங்கா அமைத்திருப்பது அவர்களை திமுக பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

கோட்டைமேடு பகுதி இஸ்லாமிய மிகுந்த பகுதி முழுமையாக திமுகவுக்கு ஆதரவாக இருக்கும். கிறிஸ்தவர்கள் வாக்கும் திமுகவுக்கு சாதகமாக இருக்கும். இதுபோக செந்தில் பாலாஜியின் தேர்தல் அணுகுமுறை அவருக்கு பெரும் வெற்றியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் சற்று போட்டியை கடுமையாக்குவார்.

தவெக சார்பில் செந்தில் குமார், நாதக சார்பில் பேரறிவாளன ஆகியோர் களம் காண்கின்றனர்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசன் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை தோற்கடித்தார்.

நமது சர்வே முடிவுபடி, இந்த தேர்தலில்

திமுக-41%
அதிமுக-38%
தவெக-16%
நாதக-4% வாக்குகள் பெறும்
.

கோவை தெற்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாக இருக்கவும் சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? கோயம்புத்தூர் | Coimbatore | Minnambalam Mega Survey Results 2026 | DMK
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share