தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
மொத்த வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள்: ஆண்-பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 சட்டசபை தேர்தல் முடிவுகள்

2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்

2026 சட்டசபை தேர்தல் கருத்து கணிப்பு

சிதம்பரம் தொகுதி.. அதிமுகவின் கேஏ பாண்டியன் சிட்டிங் எம்.எல்.ஏ. போன டைம் 2021-ல் திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சிக்கு கொடுக்கப்பட்டது இந்த தொகுதி.. இந்த முறை மனிதநேய ஜனநாயகக் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.. அக்கட்சியின் தலைவர் தமீமுன் அன்சாரி, திமுக கூட்டணி வேட்பாளராக உதயசூரியன் சின்னத்துல நிற்கிறார்.. அதிமுகவில சிட்டிங் எம்.எல்.ஏ. கே ஏ பாண்டியனே மறுபடியும் போட்டியிடுகிறார்.. இங்கேயும் நெக் டூ நெக் போட்டிதான்.. அதிமுக கொஞ்சம் லீடிங்கில இருக்கிறது.. இந்த தொகுதியில கடுமையான போட்டி இருக்கிறது.
நமது சர்வே முடிவுபடி,
திமுக – 35%
அதிமுக – 37%
தவெக- 21 %
நாதக- 6 % வாக்குகள் பெறும்.
அதிமுக எம்.எல்.ஏ. பாண்டியன் முன்னிலையில் இருக்கிறார்.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
