தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் செய்யூர் தனி சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
செய்யூர் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

செய்யூர், இது தனி தொகுதி.. இந்த தொகுதியும் போன முறை திமுக கூட்டணியில விசிகவுக்கு கொடுக்கப்பட்டது.. செய்யூர் தொகுதியில பனையூர் பாபு ஜெயிச்சிருந்தாரு.. இந்த முறையும் விசிக இங்கே போட்டியிடுது.. விசிகவின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் போட்டியிடுகிற தொகுதி. அதிமுகவின் ராஜசேகர் இங்கே களம் காண்கிறார். போன முறை அதிமுக இங்கே 4,042 வாக்குகள் வித்தியாசத்துல வெற்றி வாய்ப்பை இழந்திருந்தது.
இந்த முறை தவெக சார்பில் மோகன் ராஜா, நாதக சார்பில் சுவாதி லட்சுமி ஆகியோர் களம் காண்கின்றனர்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக கூட்டணி- 40%
அதிமுக கூட்டணி- 36%
தவெக-16 %
நாதக-6 % வாக்குகள் பெறும்
கள நிலவரம் ரொம்பவே போட்டியாக இருக்கிறது. எனினும் திமுக கூட்டணியில் விசிக வேட்பாளர் சிந்தனை செல்வன் லீடிங்கில் இருக்கிறார்.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
