நிர்மலா சீதாராமன் குட்டு அம்பலமாகி விட்டது – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

By Pandeeswari Gurusamy

|

Published on 13 Apr 2026, 6:37 PM

nirmala seetharaman accuse mkstalin on rupee symbol

பெரும்பாலான மாநில அரசுகள், நெல்லுக்கு ஊக்கத்தொகை தரவேண்டாம் எனும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது உண்மைக்கு புறம்பானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டில் நெல் உற்பத்தி அதிகமாக இருப்பதால், மாநில அரசு தரப்பில் அதற்காக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் தமிழ்நாடு அரசுக்குக் கடிதம் அனுப்பியதாகதெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

ஆனால் முதல்வரின் பேச்சு மக்களை திசை திருப்பும் செயல் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டி இருந்தார். இதனையடுத்து, “தங்கள் அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. அப்படி, பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. தங்கள் கூற்று உண்மைதான் என்றால் அந்த கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா என நிர்மலா சீதாராமனுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதைத்தொடர்ந்து நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் பதிவில், “மத்திய அரசுக்கு எதிரான வெற்றுப் பேச்சுக்களில் நேரத்தை வீணடிப்பதற்குப் பதிலாக, பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களில் நம்மை சுயசார்பு கொண்டவர்களாக மாற்றுவதை விடுத்து, வெளிநாட்டு நலன்களுக்கு ஏன் வாய்ப்புகளை வழங்குகிறார் என்பதைப் பற்றி தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும்” எனக்கூறியிருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் குட்டு வெளியாகி விட்டது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் அவர்களே,

தாங்கள் சொல்லியது உண்மையாக இருந்தால் கடிதத்தை வெளியிட்டிருந்தாலே போதும். மக்கள் படித்து உண்மையை அறிந்துகொண்டிருப்பார்கள்.

ADVERTISEMENT

அதற்கு, இவ்வளவு நீளமான பொழிப்புரை எழுதி, கடிதத்தை வெளியிட்டதிலேயே தங்களின் குட்டு அம்பலமாகிவிட்டது.

மேலும், இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநில அரசுகளும், நெல்லுக்கு ஊக்கத்தொகை தரவேண்டாம் எனும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தாங்கள் தெரிவித்திருப்பதும் உண்மைக்குப் புறம்பானது.

கடந்த பிப்ரவரி மாதம், கேரள முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் இதுகுறித்து வெளியிட்ட பதிவே இதற்குச் சாட்சி” என குறிப்பிட்டுள்ளதோடு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் போட்ட பதிவையும் மறுபகிர்வு செய்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel