சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு ரிசல்ட் 2026: வெளியானதும் எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி

Published On:

| By Santhosh Raj Saravanan

cbse class 10 result 2026 how to check

ரிசல்ட் எதிர்பார்த்து மாணவர்கள் காத்திருப்பு

மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ (CBSE) 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை (Class 10 Result) எதிர்பார்த்து நாடு முழுவதும் மாணவர்கள் காத்திருக்கின்றனர். 2026ஆம் ஆண்டிற்கான முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

ADVERTISEMENT

கடந்த ஆண்டுகளின் போக்கை கருத்தில் கொண்டால், ஏப்ரல் இறுதி முதல் மே மாத தொடக்கம் வரை ரிசல்ட் வெளியிடப்பட வாய்ப்பு இருப்பதாக கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எந்த இணையதளங்களில் பார்க்கலாம்?

ADVERTISEMENT

ரிசல்ட் வெளியானதும் மாணவர்கள் கீழ்க்கண்ட அதிகாரப்பூர்வ தளங்களில் தங்களது மதிப்பெண்களை பார்க்கலாம்:

  • சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளம்
  • ரிசல்ட்ஸ் போர்டல்
  • டிஜிலாக்கர் தளம்
  • உமாங் அப்ளிகேஷன்

இந்த பல்வேறு தளங்கள் மூலம் ஒரே நேரத்தில் அதிகமான மாணவர்கள் ரிசல்டை பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ரிசல்ட் பார்க்கும் நடைமுறை

மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை அறிய, சில எளிய படிகளை பின்பற்ற வேண்டும். முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும், “கிளாஸ் 10 ரிசல்ட் 2026” லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

ரோல் நம்பர், ஸ்கூல் நம்பர், அட்மிட் கார்ட் ஐடி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். ‘சப்மிட்’ பட்டனை அழுத்தினால், ரிசல்ட் திரையில் தோன்றும் பின்னர், மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

மாற்று வழிகளும் உண்டு

அதிக பார்வையாளர்கள் காரணமாக இணையதளம் மெதுவாக செயல்படும் சூழலில், எஸ்எம்எஸ் மூலம், டிஜிலாக்கர் மூலம், உமாங் செயலி மூலம் மாணவர்கள் தங்களது ரிசல்டை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அறிவுரை

ஆன்லைனில் கிடைக்கும் மதிப்பெண் பட்டியல் தற்காலிகமானது மட்டுமே. அசல் மார்க் ஷீட்டை பள்ளியிலிருந்து பெறுவது அவசியம். சிபிஎஸ்இ 10ம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு மாணவர்களின் அடுத்த கல்வி பாதையை தீர்மானிக்கும் முக்கிய கட்டமாகும். அதனால், அதிகாரப்பூர்வ தளங்களில் மட்டுமே ரிசல்டை சரிபார்த்து, தேவையான ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share