பிக் பாஸ் 9: எவிக்ஷன் ரத்து… மீண்டும் உள்ளே வந்த ஆதிரை! இது நியாயமா பாஸ்?

Published On:

| By Santhosh Raj Saravanan

bigg boss 9 aadhirai eviction cancelled unfair public reaction

வழக்கமாக திங்கட்கிழமை முடிந்து செவ்வாய்க்கிழமை வந்துவிட்டாலே, பிக் பாஸ் வீட்டில் “நாமினேஷன்” பற்றிய பரபரப்பு தான் இருக்கும். ஆனால், இந்த வாரம் கதை வேற! ஞாயிற்றுக்கிழமை நடந்த “எவிக்ஷன் ரத்து” (No Eviction) நாடகமும், வெளியே அனுப்பப்பட்டதாக நம்பப்பட்ட ஆதிரை மீண்டும் உள்ளே வந்ததும் தான் இப்போதைய ஹாட் டாபிக். இணையத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பிக் பாஸ் தரப்பில் பதில் இல்லை.

நடந்தது என்ன? கடந்த வாரம் நடந்த வாக்குப்பதிவில், மிகக் குறைவான வாக்குகளைப் பெற்ற அடிப்படையில் ஆதிரை வெளியேற்றப்பட வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அவரும் பெட்டியைத் தூக்கிக்கொண்டு, ஹவுஸ்மேட்ஸிடம் விடைபெற்று கிளம்பிவிட்டார். ஆனால், கடைசி நேரத்தில் “எவிக்ஷன் ரத்து” என்று அறிவித்து, மீண்டும் அவரை வீட்டுக்குள்ளேயே அனுப்பி வைத்துவிட்டது பிக் பாஸ் டீம்.

ADVERTISEMENT

ரசிகர்களின் கொந்தளிப்பு: சமூக வலைதளங்களில் இதுதான் விவாதம். ரசிகர்கள் முன்வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டுகள் இதோ:

  1. வாக்குக்கு என்ன மதிப்பு? மக்கள் தங்கள் நேரத்தைச் செலவழித்து, ஹாட்ஸ்டாரில் ஓட்டு போடுகிறார்கள். “மக்களின் தீர்ப்பு” என்று ஒவ்வொரு வாரமும் பில்டப் கொடுக்கிறீர்கள். ஆனால், மக்கள் யாரை வேண்டாம் என்று நிராகரித்தார்களோ, அவரையே மீண்டும் உள்ளே வைப்பது மக்களை முட்டாளாக்கும் செயல் இல்லையா? அப்புறம் எதற்கு ஓட்டு போடச் சொல்கிறீர்கள்?
  2. டிஆர்பி (TRP) முக்கியமா? நியாயம் முக்கியமா? ஆதிரை இருந்தால் வீட்டில் சண்டை இருக்கும், கன்டென்ட் கிடைக்கும் என்பது உண்மைதான். அதற்காக, விளையாட்டின் விதிமுறைகளையே மாற்றுவது என்ன நியாயம்? அமைதியாக, நேர்மையாக விளையாடும் போட்டியாளர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய சோர்வை உண்டாக்காதா? “எப்படி விளையாடினாலும் கன்டென்ட் கொடுப்பவர்கள் மட்டுமே காப்பாற்றப்படுவார்கள்” என்ற தவறான முன்னுதாரணத்தை இது உருவாக்குகிறது.

விஜய் சேதுபதி ரியாக்ஷன் என்ன? வழக்கமாக “மக்களின் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு” என்று பேசும் தொகுப்பாளர் விஜய் சேதுபதி, இந்த விஷயத்தில் சேனலின் முடிவை அப்படியே ஏற்றுக்கொண்டது ஏன் என்றும் கேள்விகள் எழுகின்றன. மக்களின் பிரதிநிதியாக அவர் இதைக் கேள்வி கேட்டிருக்க வேண்டாமா?

ADVERTISEMENT

மொத்தத்தில்… ஆதிரை மீண்டும் உள்ளே வந்ததால், இந்த வாரம் சண்டை, சச்சரவுக்குப் பஞ்சம் இருக்காது. ஆனால், “இது ரியாலிட்டி ஷோவா? இல்ல ஸ்கிரிப்ட் நாடகமா?” என்ற விமர்சனத்திற்கு இந்த நிகழ்வு மீண்டும் ஒரு சான்றாகிவிட்டது. இனி வரும் வாரங்களில் மக்கள் ஓட்டு போடுவதற்கே யோசிப்பார்கள் என்பதே நிதர்சனம்!

Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share