பவானிசாகர் (தனி) தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ.யார்?

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் பவானிசாகர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

 பவானிசாகர் (தனி) வாக்காளர்கள்

ADVERTISEMENT

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

சாதி வாரியான வாக்காளர்கள்

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

பவானிசாகர் தொகுதியில் திமுக கூட்டணியில சிபிஐ கட்சியின் பிஎல் சுந்தரம் களம் காண்கிறார். 2011ல் பிஎல் சுந்தரம் இந்த தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.

அதிமுக வேட்பாளராக பண்ணாரி போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளர் பண்ணாரிதான் சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

2021 தேர்தலில் பிஎல் சுந்தரம் போட்டியிட்டு 16,008 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்தார்.

2026 தேர்தலில் தவெக சார்பில் தமிழ்செல்வி , நாதக சார்பில் சௌந்தர்யா ஆகியோர் களம் காண்கின்றனர்.

நமது சர்வே முடிவுபடி, 

திமுக கூட்டணி -41%
அதிமுக கூட்டணி -39%
தவெக-15%
நாதக- 4% வாக்குகள் பெறும்

திமுக கூட்டணியில் போட்டியிடும் சிபிஐ கட்சி வேட்பாளர் பிஎல் சுந்தரம் முன்னிலையில் இருக்கிறார்.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? நீலகிரி | Nilgiris | Minnambalam Mega Survey Results 2026 | A Raja
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share