Asian Champions Trophy 2024: பாகிஸ்தானை வீழ்த்தி ‘இந்தியா’ கிளீன்-ஸ்வீப்!

Published On:

| By christopher

Asian Champions Trophy 2024: 'India' clean-sweep by defeating Pakistan!

2024 ஹாக்கி ஏசியன் சாம்பியன்ஸ் ட்ரோபி தொடர் சீனாவில் கடந்த செப்டம்பர் 8 அன்று துவங்கி நடைபெற்று வருகிறது. ஹுலுன்பியுர் நகரில் நடைபெறும் இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், கொரியா, மலேஷியா என 6 நாடுகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் விளையாடிய முதல் 4 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்ற இந்தியா, தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. இந்நிலையில், செப்டம்பர் 14 அன்று நடைபெற்ற தனது கடைசி லீக் போட்டியில், இந்தியா பாகிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்கியது.

ADVERTISEMENT

இந்த போட்டியில், ஆட்டத்தின் முதல் பகுதியில், 10வது நிமிடத்தில் கோல் அடித்த அர்ஷத் நதீம், பாகிஸ்தானுக்கு 1-0 என முன்னிலை பெற்று தந்தார்.

ஆனால், அதற்கு பதிலடி கொடுத்த இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங், முதல் பகுதியின் 13வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னரை கோலாக மாற்றி அசத்தினார். இதன்மூலம், முதல் பகுதியின் முடிவில் 1-1 என போட்டி சமனில் இருந்தது.

ADVERTISEMENT

2வது பகுதியின் 4வது நிமிடத்தில் கிடைத்த மற்றோரு பெனால்டி கார்னரையும் கோலாக மாற்றினார், ஹர்மன்ப்ரீத் சிங். இதன்மூலம் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது.

ADVERTISEMENT

இதை தொடர்ந்து, 2 அணிகளுமே கோல் அடிக்க கடுமையாக போராடின. ஆனால், 2 அணிகளுமே டிபென்ஸில் வலுவாக இருந்ததால், ஒரு அணிக்கு எதிராக இன்னொரு அணி கோல் அடிக்க திணறியது.

இறுதியில், ஆட்ட நேர முடிவில் 2-1 என இந்தியா வெற்றி பெற்றது.

Image

இதன்மூலம், லீக் சுற்றின் 5 போட்டிகளும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, 15 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 17 போட்டிகளில், தோல்வியே அடையவில்லை என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றுள்ளது.

லீக் சுற்றின் முடிவில், இந்தியாவுடன், 2வது இடம் பிடித்து பாகிஸ்தான், 3வது இடம் பிடித்து சீனா, 4வது இடம் பிடித்து கொரியா, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

அரையிறுதி ஆட்டங்கள் செப்டம்பர் 16 அன்று நடைபெறவுள்ள நிலையில், அன்று இந்திய அணி கொரியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி, இந்திய நேரப்படி பகல் 3:30 மணிக்கு துவங்கவுள்ளது.

லீக் சுற்றில், கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில், இந்தியா 3-1 என வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– மகிழ்

பேரறிஞர் அண்ணா 116வது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

Diamond League 2024: 1 செ.மீல் தங்கத்தை தவறவிட்ட நீரஜ் சோப்ரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share