மழை வெள்ள பாதிப்பு: அன்புமணி வேண்டுகோள்!

Published On:

| By Selvam

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதமடைந்த பயிர்களுக்கு தமிழக அரசு ஹெக்டேருக்கு ரூ.30.000வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை துவங்கியது. கன மழையால் மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் அதிக அளவு விவசாய விளைநிலங்கள் நீரில் மூழ்கியது.

ADVERTISEMENT

இதனால் கன மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நேற்று நிவாரணத்தொகையை அறிவித்தது.

இந்தநிலையில், தமிழக அரசு அறிவித்த நிவாரணத்தொகையை அதிகரிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பதிவில், “வடகிழக்கு பருவமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5400 ஹெக்டேருக்கு ரூ.13,500வீதம் இடுபொருள் நிவாரணமாக வழங்கப்பட்டிருக்கிறது. நெல் சாகுபடிக்கான செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் இந்த இழப்பீடு எந்த வகையிலும் போதுமானதல்ல.

ஒரு ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்ய விதைக்காக மட்டும் ரூ.9,192, உரம் மற்றும் இயற்கை உரத்திற்காக ரூ.17,924, தொடக்கநிலை ஆள் கூலிக்காக ரூ.12,000 என முதல் இரு வாரங்களில் மட்டும் ரூ.39,116 ஏக்கருக்கு ரூ.15,646 செலவாகும் என வேளாண் பல்கலைக்கழகம் மதிப்பிட்டிருக்கிறது

ADVERTISEMENT

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் அனைத்தும் இரு வாரங்களைக் கடந்தவை. அவற்றுக்கும் இந்த மதிப்பீட்டின்படி தான் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். ஆனால், அதில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக இழப்பீடு வழங்குவது எந்த வகையிலும் நியாயமல்ல

அதுமட்டுமின்றி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதமடைந்த பயிர்களுக்கு மாற்றாக புதிதாக நெற்பயிர்கள் பயிரிடப்படவில்லை. அதனால், அந்த பயிர்களை முழு சேதமடைந்ததாகவே கருத வேண்டும்.

அதை கருத்தில் கொண்டு ஏக்கருக்கு ரூ.30,000இழப்பீடு வழங்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

அதிகாலை துயரம் : பட்டாசு வெடித்து விபத்து – 4 பேர் பலி!

உதயநிதியை அமைச்சராக்கியது ஏன்? : பிடிஆர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share