அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். admk bjp allaiance confirm
தற்போது சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சந்தித்து பேசினர்.
அவர்களுடன் கே.பி.முனுசாமி, எஸ்.பி. வேலுமணி, ஆர்.பி. உதயகுமார் ஆகிய முன்னாள் அமைச்சர்களும் உடன் சென்றனர்.
இந்தநிலையில் அமித்ஷாவை சந்தித்துப் பேசிவிட்டு, கூட்டாக அனைவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அமித்ஷா அருகில் எடப்பாடி பழனிசாமி அமர்ந்துள்ளார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக -பாஜக கூட்டணி அமைவதாக அமித்ஷா அறிவித்தார்.
டிடிவி தினகரன், ஓபிஎஸ் அதிமுகவின் உட்கட்சி விவகாரம் ஆகியவற்றில் பாஜக தலையிடப் போவதில்லை என்றும் கூறினார். admk bjp allaiance confirm
.