கார்த்தியுடன் கபடி- கபடி ஆட்டம் போட்ட அதிதி

Published On:

| By Jegadeesh

‘கொம்பன்’ படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘விருமன் ‘ திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

கார்த்திக் நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சாதனை புரிந்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை தயாரித்த சூர்யாவின் 2டி நிறுவனம் தான் ‘விருமன் ‘ படத்தையும் தயாரித்திருந்தது.

ADVERTISEMENT

இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்திருந்தார். மேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

Aditi playing Kabaddi

யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் விருமன் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஒன்றை படக்குழு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் சூர்யா, கார்த்தி, அதிதி சங்கர் மற்றும் படக்குழுவினர் அவர்களுடைய குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

அப்பொழுது நடிகர் கார்த்தியுடன் அதிதி சங்கர் கபடி விளையாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

விருமன்:கார்த்தியா? அதிதியா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share