குட் பேட் அக்லி எப்படி இருக்கு? அஜித் ரியாக்சன் என்ன? : ஆதிக் சொன்ன தகவல்!

Published On:

| By christopher

adhik share ajith reaction on good bad ugly

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் நாளை (ஏப்ரல் 10) வெளியாக உள்ளது. adhik share ajith reaction on good bad ugly

மார்க் ஆண்டனி படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், த்ரிஷா, சிம்ரன், அர்ஜூன் தாஸ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்தநிலையில் சினியுலகம் யூடியூப் சேனலுக்கு ஆதிக் ரவிச்சந்திரன் அளித்த பேட்டியில், குட் பேட் அக்லி படம் பார்த்துவிட்டு அஜித் என்ன சொன்னார் என்பது குறித்து பேசியுள்ளார்.

ADVERTISEMENT

அவர் பேசுகையில், “படம் பார்த்துவிட்டு சார் ரொம்ப ஹாப்பி, படத்தின் ஆரம்பித்தில் எனக்கு எவ்வளவு சப்போர்ட் கொடுத்தாரோ, அதே அளவுக்கு தான் இப்பவும் கொடுத்தார். என்னை அவர் விட்டுக்கொடுத்ததே கிடையாது. என்னை ரொம்ப கம்போர்ட்டபிளா பார்த்துக்கிட்டாரு. ’இயக்குநருக்கு என்னை தேவையோ, அதை செய்து கொடுங்க’ என்று தான் தயாரிப்பாளரிடம் சொல்வார். அதனால் தான் இப்போ படம் சரியா போய் ரீச் ஆகனும்னு பயம் உள்ளே ஓடிட்டு இருக்கு” என ஆதிக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share