“தமிழக மக்களுக்கு “வெற்றி தீபாவளி” – ஆவின் விலை உயர்வு குறித்து எடப்பாடி காட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

EPS Attacks Vijay Govt Over Inaction

தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை நிறுவனமான ஆவின் மூலம் விற்பனை செய்யப்படும் வெண்ணெய், நெய் உள்ளிட்ட ஆவின் பொருட்களின் விலை நாளைமுதல் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில், “தமிழக மக்களுக்கு “வெற்றி தீபாவளி” பரிசாக ஆவின் நெய், வெண்ணெய், இனிப்பு பலகாரங்களின் விலையை கடுமையாக உயர்த்தி அறிவித்துள்ளது தமிழக வெற்றிக் கழக அரசு.

மக்கள் தீபாவளிக்கு அதிகமாக நெய், இனிப்புகளை வாங்குவார்கள் என்று தெரிந்தும், இப்போது சரியான நேரம் பார்த்து விலையை உயர்த்தி லாபம் பார்க்கலாம் என்று ஒரு அரசு நினைத்து செயல்படுவது என்ன மாதிரியான மனநிலை?

ADVERTISEMENT

வியாபாரிகள் கூட இந்த நேரத்தில் மக்களுக்கு சில சலுகைகள் அளித்து விற்பனையை அதிகரிக்கப் பார்ப்பார்கள். ஆனால், இந்த அரசோ, சினிமாவில் வரும் கார்ப்பரேட் வில்லனைப் போல செயல்படுகிறது.

நடிகராக இருக்கும் போது தீபாவளிக்கு வெளியாகும் விஜய் பட டிக்கெட்டுகளை விலை உயர்த்தி “Black Ticket”-ஆக விற்பது போல இனிப்புகளையும் தீபாவளி நேரம் பார்த்து உயர்த்தி விட்டீர்களோ? பழக்க தோஷத்தில் பிளாக்கில் விற்றுவிடாதீர்கள்!

ADVERTISEMENT

“அதிகம் இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும். அதைத் தடுக்கவே இந்த வெற்றி தீபாவளி திட்டம்” என்று பிரஸ் மீட் கொடுத்து உருட்ட எந்த அமைச்சரை Assign செய்துள்ளீர்கள் தமிழக முதல்வர் அவர்களே ?

மக்கள் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட, ஆவின் பால் பொருட்கள் மற்றும் இனிப்புகள் மீதான இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share