உதகை ரயில் நிலையத்தில் சர்ச்சை பதாகை- இந்தி திணிப்பு- ஆ.ராசா எம்.பி கடும் கண்டனம்!

Published On:

| By Minnambalam Desk

A Raja Hindi

உதகமண்டலம் (உதகை) ரயில் நிலையத்தில் இந்தி மொழியைத் திணித்து சர்ச்சைக்குரிய கருத்துகளுடன் வைக்கப்பட்டுள்ள பதாகையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று நீலகிரி மக்களவை தொகுதி எம்.பி. ஆ. ராசா வலியுறுத்தி உள்ளார். A Raja Hindi Ooty Railway Station
மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-க்கு எழுதிய கடிதத்தில், என்னுடைய நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட உதகமண்டலம் ரயில் நிலையம் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. தற்போது அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் இந்த ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 90% பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன.

உதகை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பதாகைகள், தமிழ் மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் உள்ளது. தமிழ்நாடு மொழி, கலாசாரம் என நீண்ட வரலாற்றைக் கொண்டது.

ADVERTISEMENT

உதகை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பதாகை ஒன்றில், ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும்’ என்ற பாரதியார் வரிகளை, மதன் மோகன் மாளவியா எழுதியதாக தவறாக கூறப்பட்டுள்ளது. இத்தகைய தேவையற்ற இந்தி மொழித் திணிப்பு பதாகைகளை மத்திய அரசு உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share