எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இன்று (ஆகஸ்ட் 10) மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது இந்திய கடல் எல்லையைத் தாண்டி முல்லைத்தீவு அருகே மீன்பிடித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஒரு விசைப்படகில் இருந்த 9 மீனவர்களை எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்து இருக்கிறது.
திரிகோணமலை கடற்படை முகாமுக்கு 9 மீனவர்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்களா அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா என்பது நாளை தான் தெரிய வரும். இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதும், கைது செய்வதும் வாடிக்கையாகக் கொண்டுள்ளதாக நாகை மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கலை.ரா
