மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வழங்கும் மாதாந்திர நிதிப் பகிர்வு விவரங்களை வெளியிட்டுள்ளது,
மாநில அரசுகளுக்கு வழங்கும் மாதாந்திர நிதிப் பகிர்வுக்கு ரூ.1,09,019 கோடி நிதியை விடுவித்துள்ளது.
மாநிலங்களின் மூலதன, வளர்ச்சிச் செலவினங்களை விரைவுபடுத்துவதற்காக அவற்றின் நிதியை வலுப்படுத்தும் இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழ்நாட்டுக்கு ரூ. 4466 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு விவரம்:
- ஆந்திரப் பிரதேசம் – ரூ4597 கோடி
- அருணாச்சலப் பிரதேசம் – ரூ1476 கோடி
- அசாம் – ரூ3552 கோடி
- பீகார் – ரூ10845 கோடி
- சத்தீஸ்கர் – ரூ3602 கோடி
- கோவா – ரூ398 கோடி
- குஜராத் – ரூ4094 கோடி
- ஹரியானா – ரூ1484 கோடி
- இமாச்சலப் பிரதேசம் – ரூ996 கோடி
- ஜார்கண்ட் – ரூ3660 கோடி
- கர்நாடகா – ரூ4504 கோடி
- கேரளா – ரூ2597 கோடி
- மத்தியப் பிரதேசம் – ரூ8010 கோடி
- மகாராஷ்டிரா – ரூ7022 கோடி
- மணிப்பூர் – ரூ682 கோடி
- மேகாலயா – ரூ688 கோடி
- மிசோரம் – ரூ615 கோடி
- நாகாலாந்து – ரூ524 கோடி
- ஒடிசா – ரூ4819 கோடி
- பஞ்சாப் – ரூ2176 கோடி
- ராஜஸ்தான் – ரூ6460 கோடி
- சிக்கிம் – ரூ365 கோடி
- தமிழ்நாடு – ரூ4466 கோடி
- தெலங்கானா – ரூ2370 கோடி
- திரிபுரா – ரூ699 கோடி
- உத்தரப் பிரதேசம் – ரூ19208 கோடி
- உத்தரகாண்ட் – ரூ1244 கோடி
- மேற்கு வங்கம் – ரூ7866 கோட
5 தென் மாநிலங்களுக்கு மொத்தம் எவ்வளவு?
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு ரூ.18.534 கோடி நிதிப் பகிர்வை வழங்கி உள்ளது மத்திய அரசு.
- ஆந்திரப் பிரதேசம் – ரூ4597 கோடி
- கர்நாடகா – ரூ4504 கோடி
- கேரளா – ரூ2597 கோடி
- தமிழ்நாடு – ரூ4466 கோடி
- தெலங்கானா – ரூ2370 கோடி
உ.பி.க்கு மட்டும் ..
ஆனால் ஒரே ஒரு உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு மட்டும் ரூ.19,208 கோடி வரிப் பகிர்வாக மத்திய அரசு வழங்கி இருக்கிறது.
